உங்களுக்கு ரசிகர்கள் கூட இருக்கிறார்களா? அசிங்கப்படுத்திய நபருக்கு ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்த உதயநிதி!

Published : Nov 25, 2018, 01:23 PM IST
உங்களுக்கு ரசிகர்கள் கூட இருக்கிறார்களா? அசிங்கப்படுத்திய நபருக்கு ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்த உதயநிதி!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் சமீப காலமாக தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்  உதயநிதி. இவரை அசிங்கப்படுத்தும் விதமாக, உங்களுக்கு ரசிகர்கள் கூட இருக்கிறார்களா என கேட்டு கேலி செய்த நபருக்கு உதயநிதி ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்துள்ளார்.   

தமிழ் சினிமாவில் சமீப காலமாக தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்  உதயநிதி. இவரை அசிங்கப்படுத்தும் விதமாக, உங்களுக்கு ரசிகர்கள் கூட இருக்கிறார்களா என கேட்டு கேலி செய்த நபருக்கு உதயநிதி ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் வினியோகிஸ்தர், என காலடி எடுத்து வைத்து தன்னால் நடிக்கவும் முடியும் என நிரூபித்தவர் நடிகர் உதயநிதி.

உதயநிதி நடிப்பு என்ற அவதாரத்தை எடுக்க முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தான். பின்னர் நடிப்பில் இறங்கிய உதயநிதி நடிப்பில் கவனம் செலுத்த அது ஓரளவுக்கு வெற்றியும் கிடைத்தது வியாபார ரீதியாகவும் வெற்றி தான் கிடைத்தது இதனால் தற்போது உதயநிதி மற்ற துறைகளை காட்டிலும், நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

ஏற்கனவே இவர் நடிப்பில் 'கண்ணே கலைமானே' வெளியாக தாயாராக இருக்கும் நிலையில், தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் நடித்து வருகின்றார். 

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு, . பல நடிகர்களின் ரசிகர்கள் தாமாக முன்வந்து உதவி வருகின்றனர். இதில் உதயநிதி ரசிகர்களும் உதவ, அதற்கு உதயநிதி அவருடைய டுவிட்டரில் நன்றி தெரிவித்து இருந்தார்.

இதை பார்த்த ஒரு நபர், மிகவும் கிண்டலாக உதயநிதி ‘உங்களுக்கு கூட ரசிகர்கள் எல்லாம் இருக்கிறார்களா’ என்று கேட்டார்.

அதற்கு உதயநிதி பதிலடி கொடுக்கும் விதமாக ஒரே வார்த்தையில் பதில் கூறி அசத்தியுள்ளார். அதாவது ‘அவர்கள் என் ரசிகர்கள் இல்லை என்னுடைய நண்பர்கள் என கூறியுள்ளார்.’ உதயநிதியின் இந்த பதிலை பலரும் பாராட்டி வருகிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயில் முதல் கோமதி வரை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு ஹைலைட்ஸ்!
5 மினிட்ஸ் பிக்பாஸ் என்று கேட்ட மகள்கள்: சந்தோஷத்தில் திகைத்து நின்ற சாண்ட்ரா! அழ வைக்கிறீங்களேப்பா!