2021 ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி...!! ரஜினியின் முதலமைச்சர் கனவு கோட்டையில் வெடி வைத்த எஸ்வி சேகர்...!!

Published : Feb 12, 2020, 03:55 PM IST
2021 ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி...!! ரஜினியின் முதலமைச்சர் கனவு கோட்டையில் வெடி வைத்த எஸ்வி சேகர்...!!

சுருக்கம்

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் ஆட்சி அமையும் என எஸ்.வி சேகர் கூறியிருப்பது ரஜினி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது 

2021ல் நடிகர் ரஜினிகாந்த சொன்னதுபோல தமிழகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என எஸ் வி சேகர் கூறும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.   நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து பாஜகவின் திட்டங்களை ஆதரித்து பேசி வரும் நிலையில் ,  எஸ். வி சேகர் இவ்வாறு கூறியுள்ளார் .  விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்படும் என ரஜினி தெரிவித்துள்ளார், இந்நிலையில் அவர் தொடங்க உள்ள கட்சிக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் கட்சியின் பெயர் சின்னம் மட்டுமே அறிவிக்க வேண்டியது பாக்கி உள்ளது.  

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி மக்களை தன் பக்கம் திருப்பும் வேலையில் இறங்கியுள்ளார் . தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என அடிக்கடி கூறும் ரஜினி அந்த வெற்றிடத்தை  நிரப்பப்போகும்  அரசியல் ஆளுமை தான்தான் என கூறுவதுபோல பேசிவருகிறார் . இந்நிலையில் அவருக்கு ஆதரவாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் , அதற்கு எதிர்மறையான கருத்து ஒன்றை நகைச்சுவை நடிகர் எஸ்.வி சேகர் கூறியுள்ளார் .  இந்நிலையில்,  ரஜினி கூறியதுபோல பாஜக ஆட்சி அமையும் என்று எஸ் வி சேகர் கூறிய காட்சிகள் எடிட் செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது .  அந்த வீடியோவில் எஸ், வி சேகர் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமையும்.  எதிர்வரும் தேர்தலில் அந்த அதிசயம் நிகழும்என்று ரஜினி சொல்கிறார். 

இதையும் படியுங்கள்:- இப்போதைக்கு ஆட்சியை டிஸ்மிஸ் செய்தாலும் கவலையில்லை...!! கெத்துகாட்டும் தமிழ் முதலமைச்சர்...!!

எந்த நேரத்தில் ரஜினி அவர்கள் சொன்னாரோ.?  இறைவன் அருளால் தான் அவர் சொல்லி இருப்பார்.  அந்த விஷயத்தில் நாம் நிறைவேற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார் . ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்து  முதல்வர் கனவில் இருந்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக  பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் பேசி வரும் நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் ஆட்சி அமையும் என எஸ்.வி சேகர் கூறியிருப்பது ரஜினி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது . அப்படியென்றால்  2021ல்  ரஜினி என்னவாகப் போகிறார்,  தனி கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போகிறாரா. அப்படி யென்றால் ரஜினி முதல்வர் இல்லையா என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் .
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு
சோலி முடிஞ்சது... ஜனனியின் பிசினஸுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்