நடிகர் சூர்யாவிற்கு இடது கையில் காயம் ஏற்பட்டதா? என்ன ஆச்சு... வருத்தத்தில் ரசிகர்கள்!

கோலிவுட் திரையுலகில், விஜய் - அஜித்தை அடுத்து இளவட்ட ரசிகர்களை அதிகம் கொண்டவர் நடிகர் சூர்யா. நடிகர் என்பதை தாண்டி இவர், தன்னுடைய அகரம் அறக்கட்டளை மூலம், வசதி இல்லாமல் படிக்க முடியாமல் கஷ்டப்படும் பல குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். இதனால் மக்கள் மத்தியிலும் இவருக்கு பெரிய வரவேற்பு உள்ளது.
 
actor suyra yet woods in left hand fans shocking

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான NGK மற்றும் காப்பான் ஆகிய படங்கள் தோல்வியை தழுவியதால், அடுத்ததாக தான் நடிக்க உள்ள படத்தின் கதைகள் மீது அதிக கவனம் செலுத்தி தேர்வு செய்து நடித்துள்ளார். 

Latest Videos

actor suyra yet woods in left hand fans shocking

அந்த வகையில், இவர் இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே இந்த படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் எதிர்பாராத விதமாக அவருடைய  இடது கையில் காயம் ஏற்பட்டதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சிறிய அளவு காயம் என்பதால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் அவர் தற்போது அதில் இருந்து மீண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தியை சூர்யா ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது.

கொரோனாவின் பிரச்சனை முடிவுக்கு வந்ததும், இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள  ‘அருவா’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் ’வாடிவாசல்’ என்ற படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image