Actor Suriya : காவல்துறைக்கு உதவிக்கரம் நீட்டிய சூர்யா... ரியல் ஹீரோ என பாராட்டும் ரசிகர்கள்

Published : Apr 26, 2022, 02:29 PM IST
Actor Suriya : காவல்துறைக்கு உதவிக்கரம் நீட்டிய சூர்யா... ரியல் ஹீரோ என பாராட்டும் ரசிகர்கள்

சுருக்கம்

சாலையோரம் வசிக்கும் வீடற்ற மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவி செய்வதற்காக சென்னை காவல் துறையின் காவல் கரங்களுக்கு வேன் ஒன்றை வழங்கியுள்ளார் நடிகர் சூர்யா.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, சமூக சேவைகளையும் செய்து வருகிறார். குறிப்பாக இவர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் மூலம் ஏராளமான ஏழை மாணவ, மாணவியர்கள் இலவசமாக கல்வி பயின்று வருகின்றனர். இதுதவிர மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார் சூர்யா.

இந்நிலையில், தற்போது தமிழ்நாடு காவல்துறைக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளார் சூர்யா. சாலையோரம் வசிக்கும் வீடற்ற மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவி செய்வதற்காக காவல் கரங்கள் என்கிற குழு செயல்பட்டு வருகிறது. அவர்களுக்காக ரூ.6 லட்சம் மதிப்புள்ள வேன் ஒன்றை தனது 2டி நிறுவனம் மூலம் இலவசமாக வழங்கி உள்ளார் சூர்யா.

சூர்யா வழங்கிய வாகனம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த வாகனத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கொடியசைத்து துவங்கி வைத்தார். அந்த நிகழ்வின் போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஏழை மக்களின் நலன் கருதி உதவிக்கரம் நீட்டியுள்ள நடிகர் சூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. அதேபோல் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பதற்கான பயிற்சியையும் இடையிடையே மேற்கொண்டு வருகிறார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது.

இதையும் படியுங்கள்... Ramya Pandian Marriage : திருமணத்துக்கு ரெடியானு கேட்ட ரசிகருக்கு... இடுப்பழகி ரம்யா பாண்டியன் தந்த கூல் பதில்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

இவ்வளவு நடந்தும் இன்னும் டிராமாவா: நான் மருமகள் தானே மன்னிக்க கூடாதா: கதறிய தங்கமயில்!
அடுத்த 1000 கோடி வசூலுக்கு ரெடியான ஷாருக்கான்... பட்டாசாய் வந்த ‘பதான் 2’ அப்டேட்