
உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் விருது நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், மேடையில் தனது மனைவியை கிண்டலடித்து பேசிய தொகுப்பாளர் கிறிஸ் ராக்கிற்கு கன்னத்தில் அறைவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டாலும், அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ள அகாடமி விருது குழுவினர், அடுத்த 10 ஆண்டுகளுக்கு வில் ஸ்மித் ஆஸ்கர் விருது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிப்பதாக அறிவித்தனர். ஆஸ்கர் கமிட்டியின் இந்த நடவடிக்கைக்கு வில் ஸ்மித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த நிகழ்வு குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள ஹீரோ பண்டி 2 என்கிற திரைப்படம் வருகிற ஏப்ரல் 29-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரகுமானிடம் தொகுப்பாளர் பல்வேறு கேள்விகளை கேட்டார். அதில் ஒரு கேள்வியாக ஆஸ்கர் விருது விழாவில் வில் ஸ்மித் அறைந்தது பற்றி கேட்டார். இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான், வில் ஸ்மித் மிகவும் இனிமையானவர். சிறந்த மனிதர். சில சமயங்களில் அந்த மாதிரி சம்பவங்கள் நடக்கும்” எனக் கூறினார்.
இதையும் படியுங்கள்... பாலியல் தொழில் செய்யச்சொல்லி வற்புறுத்தும் இயக்குனர்... கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை தீக்குளிக்க முயற்சி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.