தாலி எடுத்துக் கொடுத்து ரசிகரின் திருமணத்தை நடத்தி வைத்த சூர்யா... தாறுமாறு வைரலாகும் வீடியோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 26, 2021, 02:07 PM IST
தாலி எடுத்துக் கொடுத்து ரசிகரின் திருமணத்தை நடத்தி வைத்த சூர்யா... தாறுமாறு வைரலாகும் வீடியோ...!

சுருக்கம்

மணமேடையில் உறவினர்களின் ஆசிர்வாதத்தோடு நடிகர் சூர்யா தாலி எடுத்துக் கொடுக்க, அதை மணமகன் மணமகள் கழுத்தில்  கட்டும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார் நடிகர் சூர்யா. சமீபத்தில் சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. கொரோனா லாக்டவுன் காரணமாக படம் ஓடிடியில் வெளியான போதும், சூர்யாவின் சிறப்பான நடிப்பால் பட்டி, தொட்டி எல்லாம் படம் ஹிட்டானது. அதுமட்டுமின்றி கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம், ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்டது என அடுத்தடுத்து சாதனைகளையும் படைத்தது. இதற்கு எல்லாம் காரணம் சூர்யாவின் ரசிகர்கள் தான். 

 

இதையும் படிங்க: பைக் ரேஸர் காஸ்ட்டியூமில் தல அஜித்... ட்விட்டரை தட்டித்தூக்கும் #ThalaLatestPic ஹேஷ்டேக்...!

சூர்யா எப்படி அகரம் அறக்கட்டளை மூலமாக மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறாரோ? அதேபோல் அவருடைய ரசிகர்களும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். தன்னை கொண்டாடும் ரசிகர்களுக்காக சூர்யா செய்த காரியம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சூர்யா நற்பணி இயக்க வட சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மற்றும் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஹரி ராஜ் - பிரியா திருமணத்திற்கு சூர்யா நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

இதையும் படிங்க: “மாஸ்டர்” படத்தில் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை... இவர் தான்...!

மணமேடையில் உறவினர்களின் ஆசிர்வாதத்தோடு நடிகர் சூர்யா தாலி எடுத்துக் கொடுக்க, அதை மணமகன் மணமகள் கழுத்தில்  கட்டும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அதிரடி வெற்றிகள் முதல் சர்வதேச கவனம் வரை: 2025-ல் அதிகம் டிரெண்டிங்கில் இருந்த டாப் 5 இயக்குநர்கள் யார் யார்?
நாட்டாமை டீச்சரின் மகளா இது? அம்மாவை தொடர்ந்து சரத்குமாருடன் நடித்த மகள்: ரசிகர்கள் அதிர்ச்சி!