
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாது, சமூக சிந்தனையாளராகவும், சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் வலம் வந்தவர் விவேக். நேற்று விருகம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த மருத்துவர்கள் குழு அவரை கண்காணித்து வந்தது.
விவேக்கின் இதயத்துடிப்பு குறைவாக இருந்ததை அடுத்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 4.35 மணி அளவில் நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
விவேக் வீட்டு வாசலில் இருந்து தெருமுனை வரை அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்காக ரசிகர்களும், பொதுமக்களும் நீண்ட வரிசையில் கண்ணீர் மல்க காத்திருக்கின்றனர். இன்று மாலை 5 மணி அளவில் விருகம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் உள்ள மின் மயானத்தில் விவேக்கின் உடன் தகனம் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னதாக ஏராளமான திரையுலகினர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சூர்யா, தனது மனைவியும், பிரபல நடிகையுமான ஜோதிகா மற்றும் தம்பி கார்த்தியுடன் நேரில் வந்து தன்னுடைய இறுதி மரியாதையை செலுத்தினர். இதோ அந்த வீடியோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.