சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சின்னக் கலைவாணர் மறைந்தார்... இறுதிச்சடங்கு குறித்து வெளியான தகவல்...!

Published : Apr 17, 2021, 07:42 AM ISTUpdated : Apr 17, 2021, 07:43 AM IST
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சின்னக் கலைவாணர் மறைந்தார்... இறுதிச்சடங்கு குறித்து வெளியான தகவல்...!

சுருக்கம்

தற்போது நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

தமிழ் திரையுலகில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள முன்னணி காமெடி நடிகரான விவேக் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே விவேக்கின் உடல் நிலை மோசமாக இருந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு ஆஞ்சியோ செய்யப்பட்டு, எக்மோ கருவியின் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 4.35 மணி அளவில் நடிகர் விவேக் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. 59 வயதே ஆன விவேக் திடீரென மரணமடைந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இந்த செய்தியை கேள்விப்பட்ட திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தற்போது நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இறுதி அஞ்சலிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். விவேக்கின் வீட்டில் அஞ்சலி செலுத்த ரசிகர்களும் திரை பிரபலங்களும் குவிந்து வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்கு விருகம்பாக்கத்தில் உள்ள தகன மேடையில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விவேக்கின் உடல் எவ்வளவு நேரம் அஞ்சலிக்காக வைக்கப்படும், இறுதி சடங்கு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Ajith: அஜித் படம் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் ஷாலினி... சர்ப்ரைஸாக வெளிவந்த AK 64 பட டைட்டில்..!
Top 10 Big Budget Movies: கோடி கோடியாய் கொட்டி எடுக்கப்பட்ட இந்தியாவின் டாப் 10 மெகா பட்ஜெட் மூவீஸ்!