ஜோராக நடந்து முடிந்த இந்திரஜா சங்கரின் திருமணம் - வெயிட்டாக மொய் வைத்து மணமக்களை வாழ்த்திய நடிகர் சூரி!

Ansgar R |  
Published : Mar 25, 2024, 06:12 PM IST
ஜோராக நடந்து முடிந்த இந்திரஜா சங்கரின் திருமணம் - வெயிட்டாக மொய் வைத்து மணமக்களை வாழ்த்திய நடிகர் சூரி!

சுருக்கம்

Actor Soori : நடிகர் சூரி, இன்று பிரபல நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் மகள் இந்திரஜா சங்கரின் திருமணம நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

தமிழ் திரை உலகில் "அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட்டாக" நடிக்க தொடங்கி, அதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, "வெண்ணிலா கபடி குழு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் பரோட்டா சூரியாக மக்களால் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்ட நடிகர் தான் சூரி. தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கி தனக்கென தனி பாதை வகுத்து பயணித்து வந்தார். 

அந்த நேரத்தில் அவருக்கு கிடைத்த ஒரு மாபெரும் வாய்ப்பு தான் வெற்றிமாறனின் விடுதலை என்கின்ற திரைப்படம். அந்த திரைப்படத்தின் மூலம் நாயகனாக அதுவும் ஆக்சன் ஹீரோவாக அறிமுகமான சூரிக்கு தற்பொழுது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. அரசியலிலும் அவர் ஈடுபடவுள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகிறது.

Indraja Sankar Wedding: மாமாவையே காதலித்து கரம் பிடித்த ரோபோ ஷங்கர் மகள்! இந்திரஜா பகிர்ந்த போட்டோஸ்!

இந்த சூழலில் தனது குடும்பத்தோடு சுமார் 25 ஆண்டுகளாக ஒற்றுமையாக பயணித்து வரும் தனது நண்பர் ரோபோ சங்கர் அவர்களின் மகள் நடிகை இந்திராஜா சங்கர் அவர்களுடைய திருமணத்திற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார். "எனக்கும் ரோபோ சங்கருக்கும் வெகு ஆண்டு கால நட்பு இருந்து வருகிறது, இந்த செல்லப்பிள்ளை எனக்கும் மகள் தான்" என்றும் கூறி மணமக்களை வாழ்த்தி உள்ளார். 

இந்திரஜாவும் அவரது கணவரும் சூரியன் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றனர். மேலும் தம்பதிகளுக்கு மொய்யாக ஒரு பெரிய கவரில் வெயிட்டான பணத்தை ஒரு கட்டாக வைத்து அவர் கொடுத்த போது, அதை வாங்கிய ரோபோ சங்கர், எதிரே இருந்த கூட்டத்தினரை பார்த்து விழிகளை உயர்த்தி வெயிட்டான மொய் தான் என்று கூறி அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தினார். 

ராம்சரண் மற்றும் புஷ்பா பட இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் புதிய படம்! அதிகாரபூர்வ அறிவிப்பு !

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?