ராம்சரண் மற்றும் புஷ்பா பட இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் புதிய படம்! அதிகார பூர்வ அறிவிப்பு !

Published : Mar 25, 2024, 05:53 PM ISTUpdated : Mar 25, 2024, 05:57 PM IST
 ராம்சரண் மற்றும் புஷ்பா பட இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் புதிய படம்! அதிகார பூர்வ அறிவிப்பு !

சுருக்கம்

புகழ் பெற்ற இயக்குநர் சுகுமாரும், 'குளோபல் ஸ்டார்' ராம்சரணும் புதிய படத்தில் இணைய உள்ள அறிவிப்பு அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது.  


இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலியின் 'ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ராம் சரண் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வந்த கேம் சேஞ்சர் திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து தேர்தல் முடிந்த பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய 16-ஆவது படத்தை இயக்குனர் புஜ்ஜி பாபு சனாவுடன் நடிக்க உள்ளார்.

இந்த படம் கடந்த வாரம் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக, ஜான்வி கபூர் நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார் போனி கபூர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில் ராம் சரணின் 17-ஆவது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Indraja Sankar Wedding: மாமாவையே காதலித்து கரம் பிடித்த ரோபோ ஷங்கர் மகள்! இந்திரஜா பகிர்ந்த போட்டோஸ்!

இந்த படத்திற்காக இயக்குநர் சுகுமாருடன் ராம் சரண் இணைந்திருப்பது.. இவரது திரையுலக பயணத்தில் புதிய மைல்கல்லை குறிக்கிறது. 'ஆர் ஆர் ஆர்' படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டிற்கு பிறகு ராம்சரண் உலகளாவிய நட்சத்திரமாக உயர்ந்தபோது.. இயக்குநர் சுகுமார் அவரது இயக்கத்தில் வெளியான 'புஷ்பா' படத்தின் வெற்றியால் பெரும் புகழை பெற்றார் என்பது அனைவரின் அறிந்ததே. 

ராதிகாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த 63 வயது நடிகர்! சரத்குமார் சொன்ன வார்த்தை! மேடையில் கேட்ட பிரபலம்!

இவர்கள் இருவரும் இணையும் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பெயரிடப்படாத இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் பிரம்மாண்டமாக வெளியிடுவதை இலக்காகக் கொண்டிருக்கிறது. 'ரங்கஸ்தலம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ராம்சரண் -சுகுமார் -மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் 'ராக்ஸ்டார்' டிஎஸ்பி கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.  இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?