சொல்ல முடியாத கஷ்டத்தில் உதவியருக்கு இந்த நிலையா? கதறும் நடிகர் சூரி!

Published : Oct 12, 2018, 06:10 PM IST
சொல்ல முடியாத கஷ்டத்தில் உதவியருக்கு இந்த நிலையா? கதறும் நடிகர் சூரி!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் கலக்கல் காமெடியன் என்கிற பெயரை பெற்ற, செந்தில் - கவுண்டமணி, மற்றும் வடிவேலு அளவிற்கு இளைஞர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் தற்போதைய காமெடியர்களால் இடம் பிடிக்க முடியவில்லை என்றாலும்.

தமிழ் சினிமாவில் கலக்கல் காமெடியன் என்கிற பெயரை பெற்ற, செந்தில் - கவுண்டமணி, மற்றும் வடிவேலு அளவிற்கு இளைஞர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் தற்போதைய காமெடியர்களால் இடம் பிடிக்க முடியவில்லை என்றாலும்...  தனக்கென புது காமெடி வழியை தேர்வு செய்து, ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துவிட்டவர் நடிகர் சூரி.

தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் மிகவும் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் சூரி, மிகவும் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தன்னுடைய சொந்த ஊரான மதுரையில் இருந்து வந்து, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த போது இவருக்கு உதவியவர்களில் ஒருவர், ஷங்கர் IAS அக்காடமி நிறுவனத்தின் உரிமையாளர் ஷங்கர்.

சூரி சொல்லமுடியாத கஷ்டத்தில் தத்தளித்த போது, பல முறை உதவியுள்ளாராம். அப்படி பட்ட இவருக்கு இப்படி ஒரு நிலையா என மிகவும் உருக்கமாக பேசி கண்ணீரோடு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார் நடிகர் சூரி.

மனைவியுடன் உண்டான கருத்து வேறுபாடு காரணமாக, தன்னுடைய அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட ஷங்கர், தன்னால் IAS ஆகமுடிய வில்லை என்பதால், பலருக்கு IAS படிப்பின் நுணுக்கங்களை சொல்லி கொடுத்து, பல IAS மற்றும் IPS அதிகாரிகளை உருவாக்கியுள்ளார். இவரின் தங்கையும் மாவட்ட ஆட்சியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!