நான் அவரை படுக்கைக்கு அழைத்திருந்தால் அவர் என்னை மீண்டும் அழைத்திருப்பாரா? பெண் இயக்குனர் மீது பிரபல நடிகர் புகார்!

Published : Oct 12, 2018, 04:38 PM IST
நான் அவரை படுக்கைக்கு அழைத்திருந்தால் அவர் என்னை மீண்டும் அழைத்திருப்பாரா? பெண் இயக்குனர் மீது பிரபல நடிகர் புகார்!

சுருக்கம்

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகளும், பெண் இயக்குனர்களும் பாலியல் புகார் கூறி வருகிறார்கள். பெண் இயக்குனர் டேஸ் ஜோசப், தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள முகேஷ் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். 

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகளும், பெண் இயக்குனர்களும் பாலியல் புகார் கூறி வருகிறார்கள். பெண் இயக்குனர் டேஸ் ஜோசப், தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள முகேஷ் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். முகேஷ் மார்க்சிஸ் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.வாகவும் இருக்கிறார்.

டெஸ் ஜோசப் கூறும்போது, '1999 - ம் ஆண்டு டெலிவிஷனில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை முகேஷ் தொகுத்து வழங்கினார். அப்போது, அதன் படப்பிடிப்பிக்காக நான் ஓட்டலில் தங்கி இருந்தேன். அவர் அடிக்கடி எனது அறைக்கு வந்தார். ஹோட்டல் ஊழியர்களை வற்புறுத்தி அவரது அறைஅருகே எனது அறையையும் மாற்றினார். அவரிடம் இருந்து தப்பி விமானம் பிடித்து ஓடி வந்து விட்டேன்". என்கிறார்.

இதற்கு பதில் அளித்துள்ள முகேஷ் கூறியதாவது:

நான் சினிமா குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறேன் எனது மனைவி, தாய், சகோதரி உள்ளிட்ட அனைவருமே திரைத்துறையில் இருக்கிறார்கள். எனவே 'metoo # ' இயக்கத்தி முழு மனதோடு ஆதரிக்கிறேன். எல்லா பெண்களுக்கும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். டெஸ் ஜோசப் என் மீது சொன்ன பாலியல் புகார் உண்மை அல்ல.

தவறாக என்னை அவர் அடையாளப்படுத்தி இருக்கலாம். போனில் அவரை படுக்கைக்கு அழைத்தது நான் அல்ல. டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளருடன் எனக்கு நெருங்கிய நட்பு இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் என்னை அழைத்து இன்னொரு நிகழ்ச்சி நடந்துவது பற்றி பேச என்னை அழைத்தார். ஒரு வேலை நான் தவறாக நடந்து இருந்தால் எப்படி என்னை அழைத்திருப்பர். என் மீது தவறு இல்லை என பெண் இயக்குனர் மீது குற்றம் சொல்லி இருக்கிறார் நடிகர் முகேஷ் . 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!