வைரமுத்துவின் காலில் விழுந்தது ஏன்? சின்மயி தாயார் வெளியிட்ட தகவல்...

By sathish kFirst Published Oct 12, 2018, 4:13 PM IST
Highlights

பாடகி சின்மயி, வைரமுத்து குறித்து பாலியல் புகார் குறித்த விவகாரத்தில் அவருக்கு ஆதரவாகப் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் அவருக்கு எதிராக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பாடகி சின்மயி, வைரமுத்து குறித்து பாலியல் புகார் குறித்த விவகாரத்தில் அவருக்கு ஆதரவாகப் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் அவருக்கு எதிராக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திருமணத்துக்கு அவரை அழைத்து காலில் விழ வைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி தற்போது சமூக வலைத்தளங்களில் வெகுவாக விவாதம் செய்யப்படுகிறது. 

இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு பாடகி சின்மயி-ன் தாயார் பத்மாசினி பதிலளித்துள்ளார்.  இது குறித்து, சின்மயி-ன் தாயார் பத்மாசினி, நியூஸ் ஜெ. செனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், மீ டூ மூவ்மெண்ட் இப்போதுதான் உருவாகியுள்ளது. இந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஆரோக்கியமான சூழல் இப்போது உருவாகியுள்ளது. வைரமுத்து குறித்து எழுந்த புகார்களுக்கு ஆதரவளித்து சின்மயி பேசிய போது ‘உனக்கு என்ன தெரியும்’ என்ற வகையில் அவளை நோக்கி கேள்வி எழுப்பியபோது அவள் வெடித்து இந்த சம்பவத்தை கூறியுள்ளாள்.

திருமணத்திற்கு 250 பத்திரிகைகளை அடித்துத் தனிப்பட்ட முறையில் நானே அனைவரையும் அழைத்தேன். அவரை மேடை ஏற்றி வைரமுத்து காலில் சின்மயியை விழும்படி நானே கூறினேன். ஏனென்றால் தவறான கண்ணோட்டத்தில் பார்த்த பெண், மகள் போல் காலில் விழும்போது மனதில் மாற்றம் ஏற்படும். இதுபோன்று தான் எங்கள் குடும்பத்தில் செய்வர். யாரையும் வேண்டாம் என ஒதுக்கும்போது அது மேலும் அதிகமாகும். 

சுவிட்சர்லாந்தில் மட்டுமல்லாமல் வைரமுத்துவின் வீட்டிற்குமேல் உள்ள அவரது அலுவலகத்தில் அவளுக்கு நடந்த கொடுமையை பற்றி சின்மயி கூறுவாள். அதைப் பற்றி நான் கூறக்கூடாது அவளே கூறுவாள். எனக்கு இப்போது வரை எந்த மிரட்டலும் வரவில்லை. 

ஆனால் டுவிட் போடக்கூடாது என சின்மயிக்கு மிரட்டல் வந்துள்ளது. மீடூ மூவ்மென்ட்டை பொறுத்தவரைத் தனிப்பட்ட ஒருவருக்கு தண்டனை வாங்கித் தருவதால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. வருங்காலத்தில் இளைஞர்கள், இளைஞிகள் வாழ்வதற்கு சௌக்கியமான சூழலை ஏற்படுத்தி தருவதற்காகத்தான் இது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவருக்கு வயதாகிவிட்டது. தண்டிப்பதால் மட்டும் ஏதும் நடந்துவிடாது. இனி அதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்று பத்மாசினி கூறினார்.

click me!