
சின்மயி வைரமுத்து மீது பல்வேறு குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் தற்போது மேலும் பலர் தானும் பாதிக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைத்தளத்தில் #metoo என பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சின்மயிக்கு ஆதரவு குரல் பெருகி வருவதால், வைரமுத்து சற்று மனமுடைந்து காணப்படுவதாக தெரிகிறது.மேலும் சின்மயின் இந்த குற்ற சாட்டுக்கும், காலம் தான் பதில் தரும் என வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இந்நிலையில் வைரமுத்துவின் மனைவி நடத்தி வந்த விடுதியில் உள்ள ஒரு பெண்ணிடம், தவறாக பேசியதாக, சின்மயிடம் கருத்தை பகிர்ந்துக்கொள்ள அதனையும் அவர் வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில் வைரமுத்து மனைவி பொன்மணி வைரமுத்து நடத்தி வந்த விடுதியில் தங்கி இருந்த பெண் ஒருவர் விடுதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப் பாடுகளை பற்றி தெரிவித்து உள்ளாராம்.
அதாவது, வைரமுத்து விடுதிக்கு வருகிறார் என்று தெரிந்தாலே யாரும் விடுதியின் அறையை விட்டு வெளியில் வரக்கூடாது என்றும், அவ்வாறு வெளியில் வந்தாலும் துப்பட்டாவை அணிந்து தான் வர வேண்டும் என் கட்டுபாடுகளை விதித்து இருந்தாராம் அவரது மனைவி.
மேலும், வைரமுத்து இப்படிப்பட்டவர் தான் என்று அவர் மனைவிக்கு தெரிந்து இருப்பதால் தான், அவர் இது போன்ற கட்டுப்பாடுகளை விதித்து உள்ளார் என்பதை சுட்டிக்காட்டி உள்ளார் அந்த மாணவி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.