கோடி, கோடியாக சம்பாதித்தாலும் சூர்யா, கார்த்தியின் அடையாளம் இது தான்... மேடையில் மனம் திறந்த நடிகர் சிவக்குமார்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jan 27, 2020, 5:25 PM IST
Highlights

சூர்யா 100 படங்கள் நடிக்கலாம், கோடி, கோடியாக சம்பாதிக்கலாம், ஆனால் நிலையான பெயர் என்பது அகரத்தின் வழியாக தான் கிடைக்கும்.

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், அகரம் அறக்கட்டளையின் 10ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, அவரது தந்தை சிவக்குமார், தம்பி கார்த்தி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், அதன் மூலம் பயிலும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சிவக்குமார், குழந்தை பருவம் முதல் தான் கடந்து வந்த மோசமான கால கட்டம் குறித்து உருக்கமாக பேசினார். 

இதையும் படிங்க: "5 முறை தொழுகை செய்யாவிட்டாலும், என் மதத்தின் மீது பற்றுக்கொண்டவன் நான்"... ஷாரூக்கானின் உருக்கமான பேச்சு...!

ஒரு வயதிலேயே அப்பா இறந்துவிட்டார். அவர் கறுப்பா, சிவப்பா என்று கூட தெரியாது. பிளேக் நோயால் அண்ணன் இறந்துபோனார். சாப்பிட எதுவுமே கிடைக்காத வறுமையான காலக்கட்டத்தில் தனது தாயார் தன்னை கஷ்டப்பட்டு வளர்த்து, படிக்க வைத்ததை நினைவு கூர்ந்தார். அப்போ எல்லாம் தங்கம் 12 ரூபாய், நான் இரண்டாவது படிக்க இரண்டு ரூபாய், என் அக்கா மூன்றாவது படிக்க 3 ரூபாய் இருந்தால் போதும். அந்த காலத்தில் தங்கம் விலையில் பாதி தான் படிப்பு செலவு. ஆனாலும் அக்கா படிப்பை நிறுத்திவிட்டு தான் என்னை படிக்க வைத்தனர் என்று மிகவும் உருக்கமாக பேசினார். 

இதையும் படிங்க: மீண்டும் மேடையில் உணர்ச்சிவசப்பட்ட சூர்யா... நா தழுதழுக்க பேசியதால் உருகிய பார்வையாளர்கள்...!

சூர்யா 100 படங்கள் நடிக்கலாம், கோடி, கோடியாக சம்பாதிக்கலாம், ஆனால் நிலையான பெயர் என்பது அகரத்தின் வழியாக தான் கிடைக்கும். அகரம் பவுண்டேஷன் தான் சூர்யாவின் அடையாளம், உழவன் பவுண்டேஷன் தான் கார்த்தியின் அடையாளம் என்று பெருமிதத்துடன் கூறினார். 
 

click me!