சில தினங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் "மாவீரன்" திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நேற்று தெலுங்கு ரசிகர்களுக்காக ஹைதராபாதில் மாவீரன் திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 14ம் தேதி உலக அளவில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பணிகளை முடித்துவிட்டு தற்பொழுது காஷ்மீரில் தனது 21வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்த பிஸியான நேரத்திலும் "மாவீரன்" திரைப்படத்திற்கான பிரமோஷன் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் "மாவீரன்" திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நேற்று தெலுங்கு ரசிகர்களுக்காக ஹைதராபாதில் மாவீரன் திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி தெலுங்கு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர், குறிப்பாக சிவகார்த்திகேயனின் "பிரின்ஸ்" திரைப்பட இயக்குனர் அனுதீப் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிலையில் மேடையில் நின்று ரசிகர்கள் மத்தியில் பேசிய சிவகார்த்திகேயனிடம் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் வரும் டயலாக் ஒன்றை பேச சொல்ல, சிவாவும், அல்லுபாணியில் அதை பேசி ரசிகர்களின் ஏகோபித்த கரகோஷங்களை பெற்றார்.
Sivakarthikeyan recreates Pushpa ThaggedheLe swag at event😀pic.twitter.com/wztZVafC1A
— AmuthaBharathi (@CinemaWithAB)மீண்டும் நாயகனாகும் வடிவேலு - மாரி செல்வராஜ் செய்ய உள்ள அடுத்த சம்பவம்
சிவகார்த்திகேயன் மெல்ல மெல்ல தெலுங்கு திரையுலகிலும் மாபெரும் ரசிகர் கூட்டத்தை சேர்த்து வரும் நிலையில், விரைவில் பாலிவுட் திரைப்படங்களிலும் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதன் மூலம் "மாவீரன்" சிவகார்த்திகேயன் ஒரு பான் இந்தியா நடிகராக மாறி வருகிறார் என்று தான் கூற வேண்டும்.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தில் அதிதி சங்கர், இயக்குனர் மிஸ்க்கின், யோகி பாபு மற்றும் பிரபல மூத்த நடிகை சரிதா நடித்துள்ளார்.
பிகில் கிளப்ப ரெடியா நண்பா... ஷாருக்கானின் ஜவான் டிரைலரை வெளியிடும் தளபதி விஜய்..!