
புற்றுநோயால் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் சமூக ஆர்வலரின் மருத்துவச் செலவை ஏற்றுக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயனை வலைதளவாசிகள் வானளாவப் புகழ்துகொண்டிருக்கிறார்கள். ‘இந்த ஒரு புண்ணிய காரியத்துக்காகவே நீ சினிமாவுல சீக்கிரமே சூப்பர் ஸ்டார் ஆயிருவேண்ணா’ என்றும் சில புகழ்கிறார்கள்.
பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து, அவற்றை காப்பாற்ற அரும்பாடு பட்டுவந்தவர் ‘நெல்’ ஜெயராமன். தீவிரமான புற்றுநோய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் "நெல்" ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கபட்டு, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செய்தியை கேள்விப்பட்டு அவரை சென்னைஅப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து அவருக்கான மருத்துவ செலவை முழுவதும் ஏற்றுக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி’என்ற செய்திகள் இணையங்கள் முழுவதும் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
நெல்’ ஜெயராமனும் ’தம்பி சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொல்லணும் என்று நண்பர்கள் மூலம் தகவல் அனுப்ப பதிலுக்கு சிவகார்த்திகேயன்,’ நன்றி சொல்லாதீங்கண்ணே நீங்க குணமாகி நல்லா வரணும். அதுவே எனக்குப் போதும்’ என்று பதிலளித்திருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.