Sivakarthikeyan Pongal Celebration : பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் இணைந்து இந்த தை திருநாளை விமர்சையாக கொண்டாடியுள்ளார்.
கடந்த 2015 ஆம் வெளியான "இன்று நேற்று நாளை" என்கின்ற திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்ற இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் இவ்வாண்டு பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக வெளியான "அயலான்" திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்திய அளவில் சுமார் 4500க்கும் மேற்பட்ட விசுவல் எபக்ட்ஸ் காட்சிகளை கொண்டு வெளியான ஒரு அற்புதமான திரைப்படமாக மாறி உள்ளது.
வேற்று கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் ஒரு ஏலியனுடன் இணைந்து சிவகார்த்திகேயன் இந்த பூமியை காக்க போராடும் கதை தான் அயலான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வண்ணம் இந்த திரைப்படம் அமைந்துள்ளது. கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி இந்த மிக நீண்ட வார இறுதியில் ஒரு வெற்றி திரைப்படமாக மாறி இருக்கிறது.
'அண்ணாமலை தான் முதலமைச்சர்' நடிகர் ரஜினி சொன்ன சீக்ரெட்டை உடைத்த குருமூர்த்தி
அது மட்டும் அல்லாமல் இந்த பொங்கலுக்கு வெளியான நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்மஸ் உள்ளிட்ட 3 திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று ஜனவரி 15ஆம் தேதி தமிழர் திருநாளாம் தைத்திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று தனது குடும்பத்தாருடன் இணைந்து பொங்கல் திருநாளை கொண்டாடி இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தனது மனைவி, மகள் மற்றும் மகனோடு இணைந்து இந்த பொங்கலை கொண்டாடிய நிலையில், இது அயலான் பொங்கல் என்பதால், இந்த மகிழ்ச்சியான நாளில் சிவகார்த்திகேயன் குடும்பத்தோடு சேர்ந்து ஏலியனும் பொங்கல் கொண்டாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.