“நீ குட்டி சேதுவாக மாறிவிட்டாய்”... மறைந்த நடிகர் சேதுராமன் மனைவியின் உருக்கமான பதிவு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 17, 2020, 02:25 PM IST
“நீ குட்டி சேதுவாக மாறிவிட்டாய்”... மறைந்த நடிகர் சேதுராமன் மனைவியின் உருக்கமான பதிவு...!

சுருக்கம்

அத்துடன் இறுதியாக நான் இப்போது நீங்களாக மாறிவிட்டேன். நீங்கள் இப்போது குட்டி சேதுவாக மாறிவிட்டீர்கள். இனி உங்களையும், சஹானாவையும் ஒவ்வொரு நாளும் அன்புடன் பார்த்துக்கொள்வேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

'கண்ணா லட்டு தின்ன ஆசையா', ,வாலிபராஜா', ' சக்க போடு போடு ராஜா', 50 / 50 உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபல நடிகர் சேதுராமன் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி மாரடைப்பு  காரணமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகை சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. பிரபல தோல் மருத்துவரான இவர், பல்வேறு திரை பிரபலங்களுக்கு தோல் ரீதியான மருத்துவங்களை வழங்கி வந்தார். இவர் மரணத்தில் போது, கொரோனா பிரச்சனை காரணமாக பல பிரபலங்கள் இவருடைய இறுதி சடங்கில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், முதல் ஆளாக சந்தானம் வந்து நின்றார். இறுதி சடங்கு வரை, கூடவே இருந்து.... கண்ணீர் விட்டு அழுது தன்னுடைய அஞ்சலியை செலுத்தினார்.

 

 

இதையும் படிங்க: கணவரை கட்டி அணைத்த படி குஷ்பு... குறையாத அழகுடன் ஜொலிக்கும் கோலிவுட் தம்பதியின் வைரல் போட்டோ

இவருக்கு உமையாள் என்ற மனைவியும், சஹானா என்ற மகளும் உள்ளனர். நடிகர் சேது இறந்த போது அவருடைய மனைவி இரண்டாவது முறையாக  5  மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் சேதுவின் மனவிக்கு  ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குட்டி சேது பிறந்துவிட்டார் என குடும்பத்தினர், ரசிகர்கள் என அனைவரும் கொண்டாட்டமாக வாழ்த்து கூறினர். இந்நிலையில் கணவருக்கும் தனக்கு பிடித்த விஷயங்கள் குறித்து நீண்ட பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

 

எனக்கு திடீர் ஆச்சரியங்கள் பிடிக்கும் - உனக்கு திடீர் ஆச்சரியங்கள் பிடிக்காது.  நான் உணர்வுகளை வெளிப்படுத்துபவள் - நீ அதை சாதாரணமாக வைத்துக் கொள்வாய்.  எனக்கு வீட்டில் சாப்பிடப் பிடிக்கும் - உனக்கு ஹோட்டலில் சாப்பிடப் பிடிக்கும்.  நான் தூங்கி எழுந்ததும் அனைத்தையும் மறந்து விடுவேன் - நீ தூங்கி எழுந்தாலும் நினைவில் வைத்துக் கொள்வாய்.  நாம் சாய்ந்து அழுவதற்கு உன் தோள்களை நாடுவேன் - நீ புன்னகைத்து என் கண்ணீரைத் துடைப்பாய்.  நான் எல்லாவற்றையும் மெதுவாக செய்வேன் - நீ அனைத்தையும் வேகமாக செய்வாய். எனக்கு போட்டோ எடுக்க பிடிக்கும் - உனக்கு போஸ் கொடுக்க பிடிக்கும் என பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். 

 

 

இதையும் படிங்க: “காக்க காக்க” படத்தில் நடிக்கவிருந்தது சூர்யா இல்லையாம்... ஜோதிகா சிபாரிசு செஞ்ச ஹீரோக்கள் யார் தெரியுமா?

அத்துடன் இறுதியாக நான் இப்போது நீங்களாக மாறிவிட்டேன். நீங்கள் இப்போது குட்டி சேதுவாக மாறிவிட்டீர்கள். இனி உங்களையும், சஹானாவையும் ஒவ்வொரு நாளும் அன்புடன் பார்த்துக்கொள்வேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அத்துடன் கணவர் சேதுவுடன் எடுத்துக்கொண்ட மகிழ்ச்சியான புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு