அப்பாவிற்கு ஷேவிங் செய்து அழகு பார்த்த பிரபல நடிகர்... வைரலாகும் வீடியோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 22, 2020, 01:25 PM IST
அப்பாவிற்கு ஷேவிங் செய்து அழகு பார்த்த பிரபல நடிகர்...  வைரலாகும் வீடியோ...!

சுருக்கம்

அப்படி தனது அப்பாவிற்கு அளவுக்கு அதிகமாக வளர்ந்த தாடி, மீசையை பார்க்க முடியாத நடிகர் சதீஷ் தானே கையில் கத்தியை எடுத்து அப்பாவிற்கு சேவிங் செய்து அழகு பார்த்துள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான 'ஜெர்ரி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானவர் நடிகர் சதீஷ். இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்த தமிழ் படம் ரசிகர்கள் மத்தியில் இவரை மேலும் பிரபலமாக்கியது.இதை தொடர்ந்து, மதராசபட்டினம், வாகை சூடவா, தாண்டவம், எதிர்நீச்சல், உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

மேலும் தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் 'அண்ணாத்த' உள்ளிட்ட, அரைடஜன் படங்கள் இவரின் கை வசம் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் நடிகர் சதீஷ், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

இதையும் படிங்க: நயன்தாரா என்ன யோக்கியமா..? வாண்டடாக வம்பிழுக்கும் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி...!

தமிழ் படம் 2 ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நடிகர் சதீஷ் பெண் வேடமிட்டு, அன்ன நடை நடந்த வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி தாறுமாறு வைரலானது. தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கியுள்ள திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வீட்டில் உள்ளவர்களுக்கு உதவியாக பாத்திரம் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்து அந்த வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வருகின்றனர். 

இதையும் படிங்க: ‘ஓ போடு’ பாட்டுக்கு ஓவர் கிளாமர் டிரஸில் டிக்-டாக்... ஊரடங்கிலும் கிளுகிளுப்பை கூட்டும் கிரண்...!

தற்போது லாக்டவுனால் சலூன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆண்கள் அனைவரது முகத்திலும் அளவுக்கு அதிகமான மீசை, தாடியை பார்க்க முடிகிறது. அப்படி தனது அப்பாவிற்கு அளவுக்கு அதிகமாக வளர்ந்த தாடி, மீசையை பார்க்க முடியாத நடிகர் சதீஷ் தானே கையில் கத்தியை எடுத்து அப்பாவிற்கு சேவிங் செய்து அழகு பார்த்துள்ளார். சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?