'அறிவும் அன்பும்' கமலஹாசனின் புதிய முயற்சிக்கு குரல் கொடுத்த பிரபலங்கள்!

Published : Apr 22, 2020, 12:29 PM IST
'அறிவும் அன்பும்' கமலஹாசனின் புதிய முயற்சிக்கு குரல் கொடுத்த பிரபலங்கள்!

சுருக்கம்

உலக அளவில், ஊரடங்கு நடைமுறை படுத்தப்பட்டிருக்கும் இந்த நிலையில், பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன், மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் பாடல் ஒன்றை நாளை வெளியிட உள்ளார்.  

உலக அளவில், ஊரடங்கு நடைமுறை படுத்தப்பட்டிருக்கும் இந்த நிலையில், பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன், மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் பாடல் ஒன்றை நாளை வெளியிட உள்ளார்.

ஏற்கனவே, தன்னை தானே தனிமை படுத்தி கொண்டும்... கொரோனா எதிர்ப்பு பணிகள் பற்றிய தன்னுடைய கருத்துகளையும் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வரும் இவரின் புது முயற்சியாக ' அறிவும் அன்பும்' என்கிற பாடல் உருவாகியுள்ளது.

தற்போது நிலவி வரும் சூழ்நிலையை எடுத்து கூறும் வகையில் இந்த பாடலை, பாடியும் இயக்கியும், உள்ளார் கமல்ஹாசன். இப்பாடலை மேலும் சிறப்பாகும் விதமாக, திரையுலகை சேர்ந்த  பல கலைஞர்கள்  இந்த பாடலை கமலுடன் சேர்ந்து பாடியுள்ளனர்.

அந்த வகையில், இந்த பாடலை... அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத், ஷங்கர் மஹாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ , சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம், மற்றும் பிக்பாஸ் முகேன் ஆகியோர் ஒன்று செய்து இந்த பாடலை கமலுடன் பாடியுள்ளனர்.

இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரன் இசையமைத்துள்ளார். மகேஷ் நாராயணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.  பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த பாடல் நாளை (ஏப்ரல் 23 ஆம் தேதி), காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் கமலஹாசன் தரப்பில் இருந்து போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும்  நடிகர் கமலஹாசனின் 'அறிவும் அன்பும்' பாடலின் புதிய முயற்சிக்கு பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?
தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!