பிக்பாஸ் வீட்டின் ஆல் இந்திய ரேடியோ யார்? டபுள் கேம் ஆடுவது யார்? நச்சுனு பதில் சொன்ன நடிகர் சரவணனின் மனைவி!

Published : Jul 07, 2019, 05:32 PM IST
பிக்பாஸ் வீட்டின் ஆல் இந்திய ரேடியோ யார்? டபுள் கேம் ஆடுவது யார்?  நச்சுனு பதில் சொன்ன நடிகர் சரவணனின் மனைவி!

சுருக்கம்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், தன்னுடைய உண்மையான குணத்தால் ரசிகர்கள் மனதை வென்ற போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் பருத்தி வீரன் சித்தப்பு சரவணன். இந்நிலையில் இவருடைய மனைவி பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த போது, தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்கள் பற்றியும் பேசியுள்ளார்.  

பிக்பாஸ் போட்டியாளர்கள் பற்றி பேசிய இவர், "பிக்பாஸ் வீட்டில் யார் மிகவும் நேர்மையான குணத்துடன் விளையாடி வருகிறார் என்று, எழுப்பப்பட்ட கேள்விக்கு தன்னுடைய கணவர் சரவணன் பெயரை கூறினார்.

இதை தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் மிகவும் பாசமாக இருப்பது யார் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பாத்திமா பாபு பெயரை கூறினார்.

பிக்பாஸ் வீட்டில் அப்பட்டமாக நடிக்கிறார் என யாரை பார்த்தல் தெரிகிறது என்றால் யாருடைய பெயரை சொல்வீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, நடிகை வனிதாவின் பெயரை கூறினார்.

இரண்டு பக்கமும் கோல் போட்டு விளையாடுவது யார் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, நடன இயக்குனர் சாண்டியின் பெயரையும், ஒருவரை பற்றி மற்றொருவரிடம் குறை கூறி கொண்டு, ஆல் இந்தியா ரேடியோ போல் இருப்பவர் நடிகை அபிராமி என கூறியுள்ளார்.

ஓரளவுக்கு இவருடைய கருத்து கணிப்பு சரியாக உள்ளதாக ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒன் லாஸ்ட் டைம்... ஒரே நாளில் மோதும் விஜய் - அஜித் படங்கள்; என்ன நண்பா தல - தளபதி கிளாஷுக்கு ரெடியா?
ரோகிணி கொடுத்த புகார்... கைதாகும் விஜயா? தீப்பறக்கும் திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை