நடிகர் சரத்பாபு உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வரும் நிலையில், இவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் சரத்பாபு. ஆறடி உயரம்... ஆப்பிள் கலர், சிலிர்த்துக்கொண்டு நிற்கும் ஹேர் ஸ்டைல், முத்துக்களை உதிர்க்கும் சிரிப்பு என... 80 மற்றும் 90களில் ஹாண்ட் சம் ஹீரோவாக வலம் வந்தவர். பேரழகனாக இருந்தும், முன்னணி ஹீரோவாக தமிழ் திரையுலகில் இவரால் ஜொலிக்க முடியவில்லை. எனவே குணச்சித்திர வேடத்தில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தார்.
தற்போது 71 வயதாகும், சரத் பாபு சமீப காலமாக வயது மூப்பு காரணமாக... எந்த படங்களிலும் நடிக்காமல் ஹைதராபாத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 மாதமாக இவருடைய உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படவே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார்.
undefined
சமீபத்தில் இவருக்கு பெப்ஸிஸ் என்கிற அரியவகை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த போதிலும், அவன் உடலுறுப்புகள் செயலிழக்க துவங்கி விட்டதாக தகவல்கள் பரவியது. மேலும் நேற்றைய தினம், சரத்பாபு இறந்து விட்டதாகவும் வாந்தி ஒன்று தீயாக பரவி, சமூக வலைத்தளத்தில் மட்டும் இன்றி பிரபலங்களையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கமல், குஷ்பூ போன்ற பல பிரபலங்கள் அவருக்கு இறங்காதெரிவித்த நிலையில் பின்னர் அந்த பதிவை நீக்கினர். இந்நிலையில் இதுபோன்ற வதந்திகளை தடுக்கும் விதமாக சரத்பாபுக்கு சிகிச்சையளித்து வரும் AIG மருத்துவமனை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது சரத் பாபுவின் மருத்துவ நிலை சீராக உள்ளது. எனவே அவரின் உடல்நிலை குறித்து, எந்தவிதமான வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சரத் பாபுவின் குடும்பத்தினரிடமிருந்தோ அல்லது AIG மருத்துவமனைகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவலை நம்ப வேண்டாம் என கூறியுள்ளனர்.