சுற்றுலா சென்றுள்ள நடிகர் சந்தானம், உயிரியல் பூங்கா ஒன்றில் புலியின் அருகே அமர்ந்தபடி அதன் வாலை பிடித்தபடி எடுத்த வீடியோவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர் சந்தானம். இதையடுத்து அவரை சினிமாவில் காமெடியனாக அறிமுகப்படுத்தினார் சிம்பு. இதன்பின் படிப்படியாக விஜய், அஜித், சூர்யா, ரஜினி என முன்னணி நடிகர்களுடன் நடித்து நம்பர் 1 காமெடியன் ஆனார் சந்தானம்.
கவுண்டமனி, செந்தில், வடிவேலு, விவேக் போன்ற காமெடி ஜாம்பவான்களில் பட்டியலில் இடம்பிடிக்கும் அளவுக்கு வேறலெவல் வரவேற்பு சந்தானத்திற்கு கிடைத்தது. காமெடியனாக உச்சத்தை தொட்ட சந்தானம் தற்போது சினிமாவில் மார்க்கெட் இன்றி தவித்து வருவதற்கு காரணம் அவரின் ஹீரோ ஆசை தான்.
ஹீரோ ஆனபின்னர் காமெடி வேடங்களில் நடிக்க மறுத்த சந்தானத்திற்கு ஒன்றிரண்டு படங்கள் கைகொடுத்தன. இதையடுத்து அவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்து படுதோல்வி அடைந்ததால் தற்போது அவரின் சினிமா கெரியர் கேள்விக்குறி ஆகி உள்ளது. இந்த ஆண்டு கூட இவர் நடிப்பில் வெளிவந்த குளுகுளு, ஏஜண்ட் கண்ணாயிரம் ஆகிய இரண்டு படங்களுமே படு தோல்வியை சந்தித்தன.
இதையும் படியுங்கள்... இந்தி தெரியாதுனு சொன்னேன்... அவமானப்படுத்திட்டாங்க - மதுரை ஏர்போர்ட்டில் நடிகர் சித்தார்த்துக்கு நடந்த கொடுமை
Idharku per than 🐅 valai pidikratha 😜 pic.twitter.com/1uW77pmPgz
— Santhanam (@iamsanthanam)தற்போது கிறிஸ்துமஸ் மற்றூம் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடும் விதமாக சுற்றுலா சென்றுள்ள நடிகர் சந்தானம், உயிரியல் பூங்கா ஒன்றில் புலியின் அருகே அமர்ந்தபடி அதன் வாலை பிடித்தபடி எடுத்த வீடியோவை கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “இதற்கு பெயர் தான் புலிவாலை பிடிக்கிறதா” என நகைச்சுவையாக பதிவிட்டு இருந்தார்.
அவர் காமெடியாக பதிவிட்ட இந்த விஷயம் தான் தற்போது அவருக்கு தலைவலியாக மாறி உள்ளது. அந்த வீடியோவில் புலியை ஒருவர் குச்சியால் குத்தும்படியான காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. விலங்குகளை வதைக்கும்படியான வீடியோவை பதிவிட்டுள்ள சந்தானத்திற்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன.
இதையும் படியுங்கள்... ஏன் விஜய்க்கு போட்டியா நான் இருக்கக்கூடாதா?... வாய்விட்டு மாட்டிக்கொண்டு பாதியில் ஓடிய TTF வாசன்