
காமெடி நடிகர் சந்தானம், சினிமாவில் சம்பாதிப்பதை ரியல் எஸ்டேட், கட்டுமானம் உள்ளிட்ட பலவற்றில் முதலீடு செய்துவருகிறார். ரியல் எஸ்டேட் பிஸினஸிலும் ஈடுபட்டு வரும் சந்தானம், இதற்காக சில பல பிரச்னைகளிலும் சிக்கியுள்ளார். ஆட்களை வைத்து புகார்களும் அவர் பேரில் உள்ளன.
இந்நிலையில், திங்கள்கிழமை நேற்று மாலை 5 மணி அளவில், நிலத்தகராறு தொடர்பாக, கட்டுமான நிறுவனம் நடத்தி வருபவரையும், அவரது வக்கீல் ஆலோசகர் ஒருவரையும் தாக்கியுள்ளார். இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டு, சந்தானம் பேரில் புகார் பதிவாகியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருபவர் சண்முக சுந்தரம். இவருக்கும் , சந்தானத்திற்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, இருவரும் அடிதடியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில் அதிக ஆத்திரம் அடைந்த சந்தானம், சண்முக சுந்தரத்தை ஓங்கி அடித்துள்ளார். பதிலுக்கு அவர்களும் தாக்க, அங்கே இருதரப்பும் அடிதடியில் இறங்கியுள்ளது. இதில் சண்முக சுந்தரத்தின் வழக்கறிஞர் பிரேம்ஆனந்த் அதிகமாக காயம் அடைந்துள்ளார்
இது குறித்து தகவல் அறிந்த வளசரவாக்கம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
மிக மோசமாகக் காயமடைந்த பிரேம்ஆனந்த், வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவருக்கு இன்று சிறிய அறுவை சிகிச்சை நடைபெற வுள்ளது. அதேபோல், சந்தானமும், அவரது மேனேஜர் ரமேஷும் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
நடிகர் சந்தானம் மீது வழக்கறிஞர் பிரேம் அளித்த புகாரின் பேரில், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது வரை நடிகர் சந்தானம் படத்தில் மட்டுமே காமெடி வசனம் பேசி வந்த நிலையில், தற்போது நிஜ வாழ்க்கையிலும் பூரான் விட தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.