
தேணான்டாள் பிலிம்ஸின் பிரமாண்ட தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஆஸ்கர் நாயகன் இசையில் தளபதி நடிப்பில் மிரட்டலாக உருவாகியிருக்கும் மெர்சல் படம் ஒரு பக்கம் பல இன்னல்களை சந்தித்தாலும் அதே வேளையில் பல சாதனைகள் செய்வதில் எந்த குறையும் இல்லை எப்பொழுதும் சாதனை செய்வதில் தளபதிக்கு ஈடு தளபதிதான் என சொல்லும் அளவிற்கு வியாபாரத்தில் சக்கைப்போடு போட்டுள்ளது.
அக்டோபர் 8 ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று மிக பிரமாண்டமாக வெளியாகவுள்ள தளபதி விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு எதிரான் எழுந்த அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்த நிலையில், ரிலீஸ் பணிகளை தயாரிப்பு தரப்பு துரிதப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான புதிய புரோமோ டீசர்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டீசர் பெற்ற லைக்குகள், யுடியுபில் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளரை கவர்ந்த டீசர், ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய திரையரங்கமான ரெக்ஸில் பிரீமியர் காட்சி, என ‘மெர்சல்’ படம் மூலம் பல பெருமைகளை பெற்று வரும் விஜய் சக நடிகர்களின் படத்தை மிஞ்சியுள்ளது. இதுஒருபுறமிருக்க சமுகவலைதளங்களில் செய்யும் சாதனையால் படக்குழு மெர்சலாக உள்ளனர்.
அதுமட்டுமல்ல, கேரளாவில் 'மெர்சல்' அதிக திரையரங்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்த 'பாகுபலி'யையே கேரளாவில் 302 திரையரங்கங்களில் வெளியிடப்பட்ட நிலையில், 'விவேகம்' 320 திரையரங்கங்களில் வெளியாகி சாதனை படைத்தது. இந்த சாதனையை முறியடிக்கும் விதத்தில் 'மெர்சல்' 350 திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.
விஜய் என்கிற மாஸ் நடிகருக்கு இருக்கும் வியாபாரம், வசூல் இவைகளை மனதில் வைத்து இப்படத்திற்கு ஏராளமான பொருட்ச்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல செலவுக்கு ஏற்ப இப்படத்தை வியாபாரம் செய்ய முடியாது என்பதால் தயாரிப்பு தரப்பு தமிழ்நாடு முழுவதும் வினியோக முறையில் இப்படத்தின் வியாபாரத்தை தொடங்கியுள்ளனர்.
மேலும், சென்னை நகர விநியோக உரிமையை அபிராமி மெஹாமால் 10 கோடி ரூபாய் டெபாசிட்டாக கொடுத்து வாங்கியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.