Salim Ghouse Dies at 70: மும்பையில் வசித்து வரும் விஜயகாந்த், விஜய் படங்களின் வில்லன் சலீம் கவுஸ் தனது 70வது வயதில், உடல்நலக் குறைவால் காலமானார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன்களில் ஒருவராக வலம் வந்தவர் சலீம் கவுஸ். எல்லா நடிகர்களின் கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் ஈஸியாக பதிந்து விடாது. சின்ன கவுண்டர், வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பு திறமையால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.
சென்னையை பிறப்பிடமான கொண்ட சலீம் கவுஸ், வெற்றிவேல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். விஜய் காந்திற்கு வில்லனாக சின்ன கவுண்டர் படத்திலும், சக்கரை கவுண்டர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
அடுத்தடுத்து மகுடம், தர்மசீலன், திருடா திருடா, சாணக்கியா, ரெட், வேட்டைக்காரன் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்தவர்.
இவர் தமிழ் படம் மட்டுமின்றி, மோகன் ஜோஷி ஹாசிர் ஹோ', 'திரிகல்', 'அகாத்' உள்ளிட்ட பாலிவுட் படங்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். வெள்ளி திரை மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் ராமர், கிருஷ்ணர் மற்றும் திப்பு சுல்தான் வேடங்களில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர்.
இந்நிலையில், மும்பையில் வசித்து வரும் சலீம் கவுஸ் தனது 70வது வயதில், உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு, ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இவர் எந்த நோயால் எப்போது இறந்தார் என்ற தெளிவாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.