இயக்குனராக அவதாரம் எடுக்கும் பிரபல நடிகர் ராம்கி..!

Published : Apr 29, 2021, 07:37 PM IST
இயக்குனராக அவதாரம் எடுக்கும் பிரபல நடிகர் ராம்கி..!

சுருக்கம்

இலங்கை தொடர்கள் சில வற்றை தயாரித்து வந்தார். இவரது மனைவி நிரோஷா, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். நடிகர் ராம்கி, இயக்குனராக புதிய அவதாரம் எடுக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

சின்னப்பூவே மெல்லப்பேசு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ராம்கி, அதன் பின் அடுத்தடுத்து 8 படங்களில் கமிட் ஆகி, முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் நடிப்பில் வெளியான  செந்தூரப்பூவே, பறவைகள் பலவிதம், இது எங்கள் நீதி, இணைந்த கைகள், கருப்பு ரோஜா என பல்வேறு படங்கள் இன்று வரை ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத இடம் பிடித்தவை.

நடிகர் ராம்கியுடன் ஏராளமான படிங்களில் நடித்து வந்த நடிகை நிரோஷாவையே திருமணம் செய்து கொண்டார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் இவர்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக சினிமாவில் தலைக்காட்டாத ராம்கி, சமீப காலமாக படங்களில் நடித்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள தனது சகோதரரை பார்க்க அடிக்கடி சென்று வந்த ராம்கி, இங்கிலீஸ் என்ற படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறைக்கு வந்தார். 

மேலும் இலங்கை தொடர்கள் சில வற்றை தயாரித்து வந்தார். இவரது மனைவி நிரோஷா, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். நடிகர் ராம்கி, இயக்குனராக புதிய அவதாரம் எடுக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது. இவர் இயக்க உள்ளது திரைப்படம் இல்லை என்றும், வெப் தொடர் ஒன்றை இயக்க உள்ளதாகவும், இந்த வெப் சீரீஸ் , கதை பணிகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில்,  இயக்குனர் அவதாரம் எடுக்கவும் தயாராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!