வலிமையை கைப்பற்ற துடிக்கும் ஓடிடி தளங்கள்..? படக்குழு அதிரடி முடிவு!

Published : Apr 29, 2021, 07:11 PM IST
வலிமையை கைப்பற்ற துடிக்கும் ஓடிடி தளங்கள்..? படக்குழு அதிரடி முடிவு!

சுருக்கம்

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ள திரைப்படம் 'வலிமை'. அஜித்தின் 60வது படமாக தயாராகி வரும் இதில், அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக 'காலா' பட நடிகை ஹீமோ குரோஷி நடித்துள்ளார். அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விதவிதமாக ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து அப்டேட் கேட்டு வந்தனர்.    

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ள திரைப்படம் 'வலிமை'. அஜித்தின் 60வது படமாக தயாராகி வரும் இதில், அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக 'காலா' பட நடிகை ஹீமோ குரோஷி நடித்துள்ளார். அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விதவிதமாக ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து அப்டேட் கேட்டு வந்தனர்.  

ஒரு நிலையில், ரசிகர்களின் செயலால் பொறுமை இழந்த தல அஜித், நானும் தயாரிப்பாளரும் இணைந்து அப்டேட்டை வெளியிடும் வரை பொறுமை காக்கும் படியும், பொது இடத்தில் கண்ணியம் தவறாமல் நடந்து கொள்ளும் படியும் அறிக்கை வெளியிட்டார்.

அதன் பிறகு பல நாட்கள் இழுத்தடித்த போனிகபூர்,   அஜித்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாக அறிவித்தார். ஆனால் தற்போது ரசிகர்களின் அந்த ஆசையும் நிறைவேறாமல் போய் விட்டது. கடந்த வாரம் போனி கபூர், மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை தலை தூக்கியுள்ளதால், மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டு வரும் இந்த நேரத்தில், ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்போவது இல்லை என தெரிவித்தார்.

மேலும் தற்போது மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், வெளியாக இருந்த அனைத்து படங்களும், பின் வாங்கி கொண்டது. எனவே இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட, வலிமை படமும் தீபாவளிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு ஏற்கனவே 'அண்ணாத்த' திரைப்படத்தை வெளியிட, சன் பிச்சர்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 

தற்போது போனி கபூர் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் படத்தை வெளியிடவில்லை என்றால்... பண ரீதியாக சில சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் 'வலிமை' படத்தின் மீது ரசிகர்களுக்கு உள்ள எதிர்பார்ப்பை அறிந்து, ஒரு சில ஓடிடி தளங்கள் போனி கபூரை அணுகி பெரிய தொகைக்கு படத்தை வாங்கி கொள்வதாக கூறியுள்ளதாம். ஆனால் போனி கபூர் மற்றும் அஜித்  லேட்டாக படத்தை வெளியிட்டாலும், திரையரங்கில் தான் படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மாஸ்டர் படத்தை போல்... வலிமை படமும், தியேட்டரில் வெளியான பின், ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

700 கோடி சொத்து, 20 கோடி மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டில் சொகுசு வீடுகள்.! இந்தியாவை அலறவிடும் கதாநாயகி யார் தெரியுமா? | Priyanka Chopra Net Worth
5 நிமிடத்தில் உருவான மாஸ் ஹிட்டு.! விஜய் - சிம்ரன் மேஜிக்கை மெய் மறந்து ரசித்த ரசிகர்கள்.!