ஒற்றை பதிவுக்காக யுவன் சங்கர் ராஜாவை சுற்றிவளைத்த சர்ச்சை கேள்விகள்..! நாசுக்காக கொடுத்த நச் பதில்..!

By manimegalai aFirst Published Apr 29, 2021, 4:26 PM IST
Highlights

எப்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, வலைதளத்தில் இஸ்லாம் மதம் குறித்து எதார்த்தமாக போட்ட பதிவால், பல்வேறு சர்ச்சைக்குரிய கேள்விகளை நெட்டிசன்கள் தொடர்ந்து இவரிடம் எழுப்பினாலும், அவை அனைத்திற்கும் நாசுக்காக நச்சுனு பதிலடி கொடுத்துள்ளார்.
 

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான புகழ் பெற்றவர் இளையராஜா தனது இந்து மதத்தின் மீதும் அளவற்ற ஈடுபாடு கொண்டவர். அவருடைய இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா 2014ம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார். மேலும், அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றிக்கொண்டார். அதன் பின்னர் 2015ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2016ம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. 

எப்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, வலைதளத்தில் இஸ்லாம் மதம் குறித்து எதார்த்தமாக போட்ட பதிவால், பல்வேறு சர்ச்சைக்குரிய கேள்விகளை நெட்டிசன்கள் தொடர்ந்து இவரிடம் எழுப்பினாலும், அவை அனைத்திற்கும் நாசுக்காக நச்சுனு பதிலடி கொடுத்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் குரான் வசனம் ஒன்றை பதிவு செய்தார். இந்த வசனத்திற்கு கமெண்ட்டுகளை பதிவு செய்த நெட்டிசன் ஒருவர் ’நீங்கள் யுவன்சங்கர்ராஜாவாக பிறந்ததால் தான் உங்களை நாங்கள் பின் தொடர்கிறோம் என்றும் இது மதத்தை பரப்பும் தளம் இல்லை என்றும், கூறி இருந்தார். மேலும் இப்படி தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டால்  உங்கள் பக்கத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறியிருந்தார். இதற்கு யுவன் சங்கர் ராஜா மிகவும் கூலாக வெளியேறிவிடுங்கள் என தெரிவித்தார்.

அதே போல் மற்ற சில நெட்டிசன்கள், குரான் கூறும் நல்ல கருத்துக்களை தான், பகவத் கீதை மாறும் பைபிள் கூறுகிறது அதை நீங்கள் பார்க்கவில்லையா என கேட்டதற்கு? நான் நம்பும், பின்பற்றும்  ஒரு மதம் குறித்து பதிவு செய்வது எப்படி இன்னொரு மதத்தை மதிக்காமல் போவதாகும் என்றும் நாங்களும் தனிமனிதர்கள் தான் என்றும் எங்களுக்கும் உரிமைகள் உள்ளன என்றும், என் நம்பிக்கை என் உரிமை என்றும் நச்சுனு பதிலளித்தார் பதிலளித்துள்ளார்.

புதிய மதத்திற்கு மாறிய பிறகும் தொடர்ந்து பழைய பெயரை பயன் படுத்துவது ஏன் என்று எழுபட்ட கேள்விக்கு...  உங்களுக்கு நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலில் நான் ஒரு இந்தியன், அதன் பின்னர் நான் ஒரு தமிழன். அதன்பிறகு நான் ஒரு இஸ்லாமியன். இஸ்லாமியர்கள் அரபு நாடுகளில் மட்டும் தான் இருக்கிறார்கள் என்று சிலர் நினைத்து கொண்டால் அது அவர்களுடைய அறியாமை. மதமும் இனமும் வெவ்வேறானவை. தேசியமும் மதமும் வெவ்வேறானவை. 

இந்த அடிப்படை விஷயத்தைக் கூட புரிந்து கொள்ளாதவர்களுக்கு வேறு எதுவும் புரியாது. தயவுசெய்து வெறுப்பு பிரச்சாரத்தை நிறுத்துங்கள். அமைதி நிலவட்டும்’ என்று பதிலடி கொடுத்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவை கோபப்படுத்தும் விதமாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய போதும், அதனை நாசுக்காக சமாளித்து இவர் பதில் கொடுத்துள்ளதற்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

click me!