தீவிரவாத செயலை தூண்டும் சித்தார்த்... பாஜக சார்பில் பரபரப்பு புகார்!

Published : Apr 29, 2021, 05:09 PM IST
தீவிரவாத செயலை தூண்டும் சித்தார்த்... பாஜக சார்பில் பரபரப்பு புகார்!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும், நடிகர் சித்தார்த் நடிப்பை தாண்டி, அண்மைக் காலமாக அரசியல் சார்ந்த கருத்துக்களை நேரடியாகவும், காட்டமாகவும், தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவர் வெளியிடும் கருத்துக்களுக்கு பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகிறது.  

தமிழ் சினிமாவில் தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும், நடிகர் சித்தார்த் நடிப்பை தாண்டி, அண்மைக் காலமாக அரசியல் சார்ந்த கருத்துக்களை நேரடியாகவும், காட்டமாகவும், தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவர் வெளியிடும் கருத்துக்களுக்கு பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

அந்த வகையில் அண்மையில், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் ஆக்ஸிஜன் விவகாரம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களுக்கு சித்தார்த் மிகவும் காட்டமாக பதிவிட்ட பதிவு, மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. 

உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தங்களுடைய மாநிலத்தில் ஆக்சிஜன் இல்லை என்று யாராவது வதந்தியை கிளப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.  உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்த கருத்துக்கு தான் சித்தார்த் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் பதில் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மிரட்டும் விதமாக நடிகர் சித்தார்த் பேசியுள்ளதாக, அவர் மீது தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை ஆணையரிடம் அளிக்கப்பட்ட இந்த புகாரில் சித்தார்த் தீவிரவாத செயலை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்து வருவதால்,  அவரை கைது செய்ய வேண்டும் என்றும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கபாடகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Idhayam Murali Review : இதயம் தொட்டதா? இரிடேட் பண்ணியதா? இதயம் முரளி விமர்சனம்
Velpari Movie : ஷங்கரின் வேள்பாரியில் சூர்யாவா? தனுஷா? யார் ஹீரோ?