
80களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசனுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு வசூலில் நாயகனாக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், எங்க ஊரு மாப்பிள்ளை என பல வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றவர். ஹீரோ என்றாலே மடிப்பு கலையாத வேட்டி, சட்டையில் வலம் வர வேண்டும் என்ற வரலாற்றை மாற்றி, அரை டவுசரில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இழுந்தவர்.
அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ராமராஜனுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 8 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமடைந்தார்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்து உருக்கமான அறிக்கையை வெளியிட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வந்த ராமராஜன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த செய்தி அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரே விளக்கமளித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தான் மீண்டு வந்துள்ளதாகவும், எம் மதமும் தனக்கு சம்மதம் என தெரிவித்துள்ளார். நான் கோவிலுக்கும் செல்வேன், தேவலாயத்திற்கும் போவேன், அதே நேரத்தில் தர்காவுக்கும் செல்வேன். அரசியலுக்கு வந்த பிறகு நான் எப்படி ஒரு மதத்தில் மட்டும் இருக்க முடியும். எனக்கு எல்லோருமே வேண்டும். நான் சாதி, மதம் எல்லாம் பார்ப்பதே இல்லை எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.