தூஃபான் ஒரு குப்பை... சார்பட்டா பரம்பரை ஒரு கோகினூர் வைரம் ...!! அலரும் இந்திக்காரர்கள்

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 30, 2021, 04:01 PM IST
தூஃபான் ஒரு குப்பை... சார்பட்டா பரம்பரை ஒரு கோகினூர் வைரம் ...!! அலரும் இந்திக்காரர்கள்

சுருக்கம்

‘சார்பட்டா பரம்பரை’ படத்துடன் ‘தூஃபான்’ படத்தை கம்பேர் செய்து யூ-டியூப்பில் ரிவ்-யூக்கள் தூள் பறக்கின்றன.

ரங் தே பசந்தி, டெல்லி-6, பாக் மில்கா பாக் போன்ற படங்களை இயக்கிய தன் மூலமாக பிரபலமானவர் ஃபர்ஹான் அக்தர். பாலிவுட்டில் இளம் இயக்குநராக முத்திரை பதித்த ஃபர்ஹான் அக்தர் நடிகராக களம் கண்டுள்ள திரைப்படம் தூஃபான். இதனை ராகேஷ் ஓம்பிரகாஷ் மேஹ்ரா இயக்கியுள்ளார். குத்துச் சண்டை தொடர்பான இந்த படம் கடந்த வாரம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

தூஃபான் என்றால் புயல் என்று இந்தி அர்த்தமாம். தலைப்பில் இருக்கும் அழுத்தம் கதையில் இல்லை என்று இந்திக்கார புளூசட்டை மாறன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். ஃபர்ஹான் அக்தர் பாக்ஸர் கெட்டப்பிற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து கட்டுமஸ்தான தேகத்திற்கு மாறியுள்ளார். அவரின் அர்ப்பணிப்பை புகழும் ரசிகர்கள், கதை பற்றி கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாகத் ஆரம்பிக்கும் படம், பின்னர் அதை ஒதுக்கிவிட்டு, காதலுக்கு முக்கியத்துவம் தந்து நகர்வது ஏமாற்றம் அளிப்பதாகவும், கிளிஷேக்களுடனேயே மொத்தப் படமும் நகர்வது ஒரு பழைய படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது என்றும் நெகட்டீவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. 

இந்தியில் படத்தை பார்த்து கடுமையாக விமர்சித்து வரும் இந்திக்காரர்கள் பலரும், சார்பட்டா பரம்பரை படத்திற்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்துள்ளது யூ-டியூப்பில் டாப் ட்ரெண்டிங்காக மாறி வருகிறது. வடசென்னையின் பாக்ஸிங் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தை என்ன தான் இங்கிலீஷ் சப்டைடில் உடன் பார்க்க வேண்டும் என்றாலும், ஒரு நிமிடம் கூட போர் அடிக்கவில்லை என்றும், படம் விறுவிறுப்பாக உள்ளதாகவும் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெருகி வருகிறது. 

அதேசமயத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ படத்துடன் ‘தூஃபான்’ படத்தை கம்பேர் செய்து யூ-டியூப்பில் ரிவ்-யூக்கள் தூள் பறக்கின்றன. ராகேஷ் ஓம்பிரகாஷ் மேஹ்ரா குப்பை  இயக்கிய தூஃபான் படத்தை குப்பை தொட்டியில் தான் வீச வேண்டும் என்றும், சார்பட்டா பரம்பரை திரைப்படம் கோஹினூர் வைரம் என்றும் இந்திக்காரர்களின் யூ-டியூப் சேனல்கள் பலவும் கதற ஆரம்பித்துள்ளன. ஹாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ராக்கி திரைப்படத்தின் இந்திய வெர்ஷன் என சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை தான் கூற வேண்டும் என்றும் புகழ்ந்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!
கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்