அதிக சொத்துள்ள தெலுங்கு நடிகர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த ராம்சரண்! இத்தனை கோடியா?

Published : Feb 07, 2019, 01:46 PM ISTUpdated : Feb 07, 2019, 02:53 PM IST
அதிக சொத்துள்ள தெலுங்கு நடிகர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த ராம்சரண்! இத்தனை கோடியா?

சுருக்கம்

தெலுங்கு சூப்பர் ஸ்டார், நடிகர் சிரஞ்சீவி மகன்,  ராம் சரண் 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'சிறுத்த'  படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  

தெலுங்கு சூப்பர் ஸ்டார், நடிகர் சிரஞ்சீவி மகன்,  ராம் சரண் 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'சிறுத்த'  படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த படத்தை தொடர்ந்து, ராஜமௌலி இயக்கத்தில் அவர் நடித்த 'மகதீரா' படம் வசூல் சாதனை நிகழ்த்தி, இவருடைய திரைவாழ்வில் மிகப்பெரிய  திருப்புமுனையை ஏற்படுத்தியது.  இதில் கதாநாயகியாக நடித்த,  காஜல் அகர்வாலுக்கும் முன்னணி நடிகையாக அடித்தளம் அமைத்தது.

இந்த படத்தை தமிழில் 'மாவீரன்' என்ற பெயரில் வெளியிட்டனர். அதன்பிறகு ராம்சரண் தெலுங்கில் மளமளவென உயர்ந்தார்.  பின் இவர் நடிப்பில் வெளியான 'ஆரஞ்சு', 'நாயக்', 'எவடு'  ஆகிய படங்கள் தொடர்ந்து இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.

தற்போது சிரஞ்சீவி, நயன்தாரா, ஜோடியாக நடிக்கும் படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் 'ஆர் ஆர் ஆர்' என்ற படத்திலும் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருடைய  சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அவருக்கு ரூபாய் 1300 கோடி சொத்து உள்ளதாகவும்,  இதன் மூலம் தெலுங்கில் அதிக சொத்து உள்ள நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் என்றும் தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஐதராபாத், ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் ராம் சரண், ரூ.38 கோடி செலவில் புதிதாக சொகுசு வீடு ஒன்று கட்டி இருக்கிறார் தென்னிந்திய படங்களில் அதிக செலவில் கட்டப்பட்டுள்ள வீடு என இது மதிப்பிடப்பட்டுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி