
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) உடல்நல பிரச்சனை காரணமாக தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரது உடல்நிலை பூரண நலம் பெற அவரது ரசிகர்கள் திருப்பரங்குன்றம் கோவிலில், வழிபாடு நடத்தியுள்ளார்.
மேலும் செய்திகள்: வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் யங் லுக்கில் செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் அஜித்! வைரலாகும் போட்டோஸ்!
தாதா சாகேப் பால்கே விருது, வாங்குவதற்காக குடும்பத்துடன் டெல்லி சென்ற ரஜினிகாந்த், தன்னுடைய பயணத்தை முடித்து வந்த கையேடு, பேரனுடன் 'அண்ணாத்த' படத்தை பார்த்து மகிழ்ந்ததாக, மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் துவங்கியுள்ள hoote ஆப்பில் பதிவிட்டு மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் திடீர் என அக்டோபர் 28 ஆம் தேதி மாலை திடீரென, ரஜினிகாந்த் உடல்நல பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியானது.
ஆனால் அவரது குடும்பத்தினர் இதற்க்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, வருடாந்திர உடல் பரிசோதனை காரணமாகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது உடலுக்கு என்னதான் கோளாறு? எதற்காக இந்த திடீர் அட்மிட் என்ற கேள்விகள் துளைத்தெடுக்க பெரும் கவலையில் ஆழ்ந்தனர். தலைவர் உடல்நலம் பூரண குணமாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள், திரையுலகத்தினர் உள்பட பலர் தொடர்ந்து பிராத்தனை செய்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: கொசுவலை போன்ற சேலையில் மெல்லிய இடையை மொத்தமாக காட்டி... இளசுகளை மூச்சு முட்ட வைத்த சாக்ஷி அகர்வால்!
இந்நிலையில் இன்று மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ரஜினிகாந்த் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி அவரது ரசிகர்கள் 108 தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு செய்தது மட்டும் இன்றி, திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் திருக்கோவிலில் மண் சோறு சாப்பிட்டுசிறப்பு வழிபாடு செய்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: தலையில் ஹெல்மெட்டுடன் குட்டி தல! அப்பா 8 பாய்ந்தால்... 16 அடி பாய தயாராகும் அஜித் மகன் ஆத்விக்! வைரல் போட்டோ..
தற்போது ஐசியுவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள ரஜினிகாந்த் சீரான உடல்நிலையுடன் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவருடைய உடல்நிலை குறித்து தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், தலைசுற்றல் காரணமாக ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது ரத்தத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் சிகிச்சை மேற்கொள்ள பட்டதாகவும், அது நல்லபடியாக முடிந்து தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் மருத்துவ குழுவினர், தொடர்ந்து ரஜினிகாந்த் உடல்நிலையை தீவிரமாக கவனித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: காத்து வாங்க ரொம்ப வசதியா... ஓப்பன் ட்ரெஸ்ஸில் மொத்த அழகையும் காட்டிய அஞ்சலி! கிறுகிறுத்து போன ரசிகர்கள்!
இந்நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு நேரடியாகவே சென்று ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஓரிரு நாட்களில் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.