நடிகர் சரத்பாபு மறைவை தொடர்ந்து, அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்... தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
80 மற்றும் 90-களில் பல படங்களில், கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் சரத்பாபு. கடந்த இரண்டு மாதமாகவே உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்.. நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து, திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் தொடர்ந்து, தங்களின் அஞ்சலிகளையும்... சரத் பாபு பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரத் பாபு, அழகில் பல ஹீரோக்களை பொறாமை பட வைத்தவர். இந்த அழகு தான், இவருக்கு சில படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் போகவும் காரணமாகவும் அமைந்தது. ஹீரோவாக தொடர்ந்து நடிக்கமுடியவில்லை என்றாலும், இரண்டாவது ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக... ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்திருந்தார் சரத்பாபு.
அந்த வகையில் ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று, ரஜினிகாந்த் மற்றும் சரத்பாபு இணைந்து நடித்த, 'அண்ணாமலை'. இப்படத்தின் ஷூட்டிங்கின் போது... ஒரு நீண்ட வசனத்தை பேச முடியாமல் ரஜினிகாந்த் திணறியபோது, மிகவும் கூலாக சிகரென்ட் பிடிக்க வைத்து, அந்த வசனத்தை தன்னை பேச வைத்தார் என்கிற, தகவலை ரஜினிகாந்த் சரத்பாபுவிற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் தெரிவித்துள்ளார்.
சரத்பாபுவிற்கு இப்படி ஒரு கடைசி ஆசை இருந்ததா? அடடா... கடைசிவரை நிறைவேறாமலே போயிருச்சே!
சரத்பாபு நான் சிகரெட் பிடிப்பதை பார்த்தல் மிகவம் வருத்தப்படுவார். சிகரெட்டை நிறுத்து, உடம்பை கெடுத்துக்காத, ரொம்ப நாள் நீ வாழனும் அப்படினு சொல்லிகிட்டே இருப்பாரு. குறிப்பாக நான் சிகரெட் பிடிச்சிட்டு இருப்பதை பார்த்தல், அதை பிடுங்கி தூக்கி கீழ போட்டு அனைச்சிருவாரு. இதனால, அவரு முன்னாடி நான் சிகரெட்டே பிடிக்க மாட்டன், என ரஜினி கூறியது சரத் பாபு மீது அவர் வைத்திருந்த மரியாதையையும் வெளிப்படுத்தும் விதத்தில் இருந்தது.
தன்னை விட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்த நடிகர் சரத்பாபு.. யார் இந்த ரமா பிரபா?
அப்படி சொல்லும் சரத் பாபுவே ஒருமுறை... ரஜினிக்கு சிகரெட் பற்ற வைத்த ரகசியத்தையும் கூறியுள்ளார். ரஜினி - சரத் பாபு இணைந்து நடித்த அண்ணாமலை படத்தில் சரத் பாபு வீட்டிற்கு வந்து ரஜினி கோபமாக பேசும் டயலாக் ஒன்று இடம் பெற்றிருக்கும். அந்த சவால் விட்ற டயலாக் பேசி முடிக்க ரஜினி திணறி கொண்டிருந்தாராம். அடுத்தடுத்து 10, 12 டேக் போய்க்கொண்டே இருக்க சரத் பாபு பக்கத்துல வந்து, 'ரஜினி கூச்சோ இக்கடா அப்பிடினு சொல்லி ஏ சிகரெட் தீசுகோரண்டி அப்டின்னு சொல்லி, சிகரெட் தாகுன்னு' சொன்னவர் . அவரே அதை பற்ற வச்சி, ரஜினியை ரிலாக்ஸ் செய்ய சொல்லியுள்ளார். அந்த சிகரெட் பிடிச்சதுக்கு அப்றம், ரிலாக்ஸா அந்த டேக் ஓகே ஆகிடுச்சாம். இதனை ரஜினி இப்போது கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.