
தளபதி விஜயின் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரபல நடிகர் சரத்குமார், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியதில் இருந்து இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்று கூறியும், சரத்குமார் மற்றும் தளபதி விஜய் அவர்களை சாடியும் பல கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிடப்படுகிறது.
இந்நிலையில் அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், ரஜினிகாந்த் கூறிய காக்கா கழுகு கதையை மேற்கோள்காட்டி, நடிகர் விஜய்யை தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவ்வாறு பேசியுள்ளார் என்ற ஒரு புதிய பிரச்சனையும் வெடித்தது.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த தளபதி விஜய் ரசிகர்கள், "என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம்" என்று தளபதி விஜய், ரஜினி அவர்களை பார்த்து கூறுவதைப் போல ஒரு போஸ்டர் ஒன்றை வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அந்த போஸ்டரை, ரஜினிகாந்தின் ரசிகர்கள் கிழித்துள்ளது இரு நடிகர்களின் ரசிகர்களிடையே ஒரு மோதல் போக்கை உருவாக்கி உள்ளது. நடிகர்களை ரசிப்பதும், கொண்டாடுவதும் தவறில்லை என்றபோது, அவர்களுக்காக இப்படி கடும் பிரச்சனைகளில் ஈடுபடுவது பலரையும் முகம்சுளிக்க வைப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.