"வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஆனந்தம்" - ஆண் குழந்தைக்கு தாயானார் நடிகை இலியானா - பெயர் என்ன தெரியுமா?

By Ansgar R  |  First Published Aug 6, 2023, 12:00 AM IST

பிரபல பாலிவுட் நடிகை இலியானா அண்மையில் தான் கர்பமாக இருப்பதாக கூறி தனது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். அதே போல தற்போது, கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை தற்போது தனது இன்ஸ்டா பக்கம் மூலம் அறிவித்துள்ளார் அவர்.


அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் "எங்கள் அன்பான மகனை, இந்த உலகிற்கு வரவேற்பதில் நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம் என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது" என்று கூறி, தங்களது மகனின் பெயர் Koa Phoenix Dolan என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

சில தினங்களுக்கு முன்பு அவர் தனது காதலருடைய புகைப்படத்தை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுநாள் வரை அவருடைய காதலன் யார் என்பதை வெளிப்படையாக அவர் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tap to resize

Latest Videos

Rathamaarey Song: தாத்தா - பேரன் பாச மழையில் நனைய வைக்கும் 'ஜெயிலர்' மூன்றாவது சிங்கிள் பாடலான ரத்தமாரே..!

மும்பை நகரில் பிறந்த இலியான, இதுவரை இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக தமிழில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான தளபதி விஜயின் நண்பன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

பாலிவுட் உலகில் பிசியான நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் இலியானா, லண்டன் நகரைச் சேர்ந்த ஒரு மாடல் நடிகருடன் தற்பொழுது வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இறுதியாக அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான தி பிக் புல் என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் அவருடைய நடிப்பில் இரு திரைப்படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்யப்பட்ட ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் படமான ‘மூன்று முகம்’! நாளை ரிலீஸ்!

click me!