டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்யப்பட்ட ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் படமான ‘மூன்று முகம்’! நாளை ரிலீஸ்!

By manimegalai a  |  First Published Aug 5, 2023, 9:59 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் சக்க போடு போட்ட 'மூன்று முகம்' திரைப்படம், டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்யப்பட்டு நாளை கமலா சினிமாஸ் வெளியிட உள்ளது.
 


திரைப்பட ஆர்வலர்கள், பார்வையாளர்கள் என சினிமா ஆர்வலர்கள் கொண்டாடும் ஒரு இடமாக கமலா சினிமாஸ் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும்  பாதுகாத்து, பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை கொடுத்து வருகிறது. அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எவர் க்ரீன் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘மூன்று முகம்’ படத்தின் டிஜிட்டல் ரீமாஸ்டர் செய்யப்பட்ட வெர்ஷனை கமலா சினிமாஸ் இப்போது மீண்டும் வெளியிடுகிறது.

Tap to resize

Latest Videos

இதுக்கு ஒரு எண்டே இல்லையா? ஜவ்வு போல் இழுத்து கொண்டு போகும் கயல் சீரியல்.. காண்டான ரசிகர்கள்..!

இதுகுறித்து கமலா சினிமாஸ் உரிமையாளர் விஷ்ணு கமல் கூறும்போது, ​​“எங்கள் திரையரங்குகளில் வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படங்களை பல வருடங்களாக ஒவ்வொரு பார்வையாளர்களும் இதயப்பூர்வமாக கொண்டாடி வருகின்றனர். தற்போது அவரது பிரம்மாண்டமான திரைப்படமான ‘மூன்று முகம்’ டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்யப்பட்ட பதிப்பை மீண்டும் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். 

ஜீவானந்தம் யார் தெரியுமா? உடைந்தது சஸ்பென்ஸ்... இதை தாங்குவாரா குணசேகரன்! 'எதிர்நீச்சல்' அப்டேட்!

இப்படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆன போதிலும், ரஜினிகாந்த் சாரின் வசீகரத்திற்காகவும், சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் டயலாக் மற்றும் ஸ்டைலுக்காகவும் தற்போதைய தலைமுறை இளைஞர்கள் கூட கொண்டாடுகிறார்கள். 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10, 2023 அன்று திரையரங்குகளில் வெளிவர இருக்கும் இந்த சூழலில், இந்தப் படத்தை மீண்டும் வெளியிடுவதன் மூலம் ரஜினிகாந்த் சாருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒரு கொண்டாட்டத்தைக் கொடுக்க விரும்பினோம். இந்த வெளியீட்டை எளிதாக்கிய சத்யா மூவிஸ் சார் தங்கராஜ் அவர்களுக்கு கமலா சினிமாஸ் நன்றி தெரிவித்துக் கொள்கிறது" என்றார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'மூன்று முகம்' நாளை (ஆகஸ்ட் 6, 2023) கமலா திரையரங்கில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

click me!