தல அஜித் அவர்களின் "அமர்க்களம்" திரைப்படத்தில் வரும் "மகா கணபதி" பாடல் இவரை தனித்து அடையாளம் காட்டியது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் கடந்த 1993ம் ஆண்டு வெளியான "உழைப்பாளி" என்ற திரைப்படத்தின் மூலம் குரூப் டான்சராக திரையுலகில் கால் பதித்தவர் தான் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ். அதைத்தொடர்ந்து சுமார் ஆறு ஆண்டு காலங்கள் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு திரையுலகங்களிலும் பல பாடங்களில் வரும் பாடல்களில் குரூப் டான்சராக நடனமாடி வந்தார்.
தல அஜித் அவர்களின் "அமர்க்களம்" திரைப்படத்தில் வரும் "மகா கணபதி" பாடல் இவரை தனித்து அடையாளம் காட்டியது. அதன் பிறகு ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் நேற்று நடித்து வந்த இவர் "அற்புதம்" என்ற திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக களம் இறங்கினார்.
தற்பொழுது நல்ல இயக்குனராகவும், நடிகராகவும் மற்றும் நடன இயக்குனராகவும் புகழின் உச்சியில் உள்ள ராகவா லாரன்ஸ், அருள் நிதியின் "டைரி" திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற இன்னாசி பாண்டியன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகவுள்ள "புல்லட்" என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் என்று நடிக்க உள்ளார்.
Words cannot express my happiness as I present my brother 's "" title look. I'm happy to share that I'm doing a prominent role in the film. Seeing him embrace the role of a hero fills me with immense pride & excitement. Just as you all showered me with love… pic.twitter.com/u3Id9EPzOR
— Raghava Lawrence (@offl_Lawrence)ஆனால் இந்த படத்தின் நாயகன் அவர் அல்ல, ராகவா லாரன்சின் உடன்பிறந்த தம்பி எல்வின் தான் இந்த திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். தம்பிக்காக ஒரு திரைப்படத்தை தற்பொழுது நடிக்க உள்ளார் ராகவா லாரன்ஸ். கதிரேசன் தயாரிப்பில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் பூஜையுடன் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் மாவீரன்... அடேங்கப்பா! இரண்டே நாட்களில் இத்தனை கோடியா?