இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் இருந்து தலைவரின் இன்ட்ரோ பாடலான 'ஹுக்கும்' பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியனாக நடித்துள்ள, 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே 'ஜெயிலர்' படத்தில் தமன்னா ஆடிய ஐட்டம் பாடலான காவாலா லிரிக்கல் பாடல் வெளியாகி, ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலக பிரபலங்களையும் ஆட்டம் போட வைத்த நிலையில்... அடுத்ததாக ஹுக்கும் என்கிற செகண்ட் சிங்கிள் பாடலை வெளியிட உள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.
அதன்படி இந்த பாடல், ஜூலை 17ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த பாடலின் ப்ரோமோ இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது வெளியாகி உள்ள இந்த பாடலின் ப்ரோமோவில் படு மாஸாக பேசி சும்மா புல்லரிக்க செய்துள்ளார் சூப்பர் ஸ்டார்.
"ஹேய் இங்க நான் தான் கிங், இங்க நான் வச்சது தான் ரூல்ஸ்! அந்த ரூல்ஸை நான் அப்பப்போ என் இஷ்டத்துக்கு மாத்திக்கிட்டே இருப்பேன். அதை கப் சிப்புனு கேட்டு ஃபாலோ பண்ணனும். அத விட்டுடுது ஏதாவது அடாவடி தனம் பண்ண நினைச்ச.... உன்ன கண்டம் துண்டமா வெட்டி கலைச்சி போட்டுடுவேன். ஹுக்கும் டைகர் கா ஹுக்கும். என மாஸாக பேசி துப்பாக்கியை வைத்து மிரட்டும் காட்சிகள் இந்த புரோமோவில் இடம்பெற்றுள்ளது.
தலைவரின் இன்ட்ரோ பாடலாக, இப்பாடல் உருவாகி உள்ளது. 'ஜெயிலர்' படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மலையாள நடிகர் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷரீஃப், நடிகர் விநாயகன், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணா, யோகி பாபு, உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை, ஜூலை மாதத்தின் இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடத்த பட குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Goosebumps guaranteed is here!🔥 ready to 💥🌪️ from Aug 17th pic.twitter.com/TIER1OZsJy
— Sun Pictures (@sunpictures)