அப்ரூவர் ஆன ராதாரவி.. இந்த ஒரு படம் தான் ஓடுது..! இவர் தான் Born ஆக்டர்! மேடையில் புகழாரம்!

By manimegalai a  |  First Published Aug 21, 2022, 6:51 PM IST

நடிகர் ராதா ரவி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, கமல்ஹாசன் பற்றி உயர்வாக பேசியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் வெளியாகி 75 நாட்களுக்கு மேல் ஆகியும், இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது. இதில் என்ன இன்னும் சிறப்பு என்றால், 'விக்ரம்' படம் அதிகார பூர்வாமாக ஓடிடி தளத்தில் வெளியான பின்னரும் கமல் ரசிகர்கள் பலர், திரையரங்கில் இந்த படத்தை பார்த்து ரசித்து வருகிறார்கள். 

Latest Videos

மேலும் செய்திகள்: 60 ஆவது பிறந்தநாளை... திரையுலக நட்சத்திரங்களுடன் ஆடம்பரமாக கொண்டாடி.. அமர்களப்படுத்திய ராதிகா! போட்டோஸ்..!


90-களில் பல படங்கள் 100 நாட்கள், 150 நாட்கள் ஓடி சாதனை படைத்த நிலையில்... இப்போதெல்லாம் ஒரு படம் ஒரு வாரம் நிலையாக திரையரங்கில் ஓடினால் அதுவே சாதனையாக பார்க்கப்படுகிறது. இனிமேல் 50 நாட்களை தாண்டி ஒரு படம் ஓடுவதை பார்க்கவே முடியாதா? என திரையுலகினர் கவலையில் இருந்த சமயத்தில் தான், 'விக்ரம்' படம் அது போன்ற நினைப்புகளை தவிடுபொடி ஆக்கும் விதமாக இன்னும் திரையரங்கில் ஓடிக்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்: தூக்கு துரை மகளா இது? தண்ணீருக்கு நடுவே வெள்ளை உடையில்... ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்து மிரட்டும் அனிகா!
 

இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டுவரும் நிலையில், இந்த உண்மையை மேடையில் ஒப்புக்கொண்டுள்ள ராதா ரவி, இத்தனை இளைஞர்கள் மத்தியில், நின்று இப்படி ஒரு வெற்றிப்படத்தை கொடுத்துள்ள கமல் தான் born ஆக்டர் என புகழ்ந்து தள்ளியுள்ளார். கமலின் படம் வெற்றி பெற்றுள்ளது தனக்கு மிகவும் பெருமையாக இருந்ததாகவும், அவரெல்லாம் எங்களுடைய குரூப்... அவரை நம்பி நாம் படத்தில் நடிக்கலாம் என நம்பிக்கை வந்துள்ளது. நாம் நடித்தாலும் ஓடும் என்கிற நம்பிக்கை வந்துள்ளதாக கூறிய ராதாரவி. தொடர்ந்து நல்ல கதைகள் கொண்ட படங்கள் ஓடவேண்டும் என கூறியுள்ளார்.

click me!