நடிகர் பிரபு மற்றும் தயாரிப்பாளர் கே.ஆர் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து..!

Published : May 09, 2021, 12:14 PM IST
நடிகர் பிரபு மற்றும் தயாரிப்பாளர் கே.ஆர் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து..!

சுருக்கம்

திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சராக பதவி ஏற்றது முதல் பிரபலங்கள் தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் பிரபு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தனது அன்னை இல்லம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்தார்.

சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக மட்டும் 125 தொகுதியில் பெரும்பான்மையோடு தன்னுடைய வெற்றியை நிறுவூபித்து ஆட்சியமைக்கிறது. இதை தொடர்ந்து, மே 7 ஆம் தேதி காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஸ்டாலின் உட்பட 34 அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். 

முதல்வராக பதவி ஏற்றதுமே ஸ்டாலின், முக்கிய 5 கோப்புகளில் கையெழுத்து போட்டார், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண தொகை 4 ,000 வழங்குதல், பெண்களுக்கும், திருநங்கைகளுக்கு சாதாரண கட்டண நகர பேருந்துகளில் இலவசம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை உடனுக்குடன் நிறைவேற்றினார். இதனால், ஸ்டாலின் தன்னுடைய தரப்பில் இருந்து அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கையும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: பாவாடை தாவணியில் கிராமத்து பச்சை கிளியை மாறிய ஷாலு ஷம்மு..! அசத்தல் போட்டோ ஷூட்..!
 

திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சராக பதவி ஏற்றது முதல் பிரபலங்கள் தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் பிரபு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தனது அன்னை இல்லம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்தார் .முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பெரியப்பா கலைஞர் மற்றும் அப்பா சிவாஜிகணேசன் அவர்களுடைய ஆசீ உண்டு எனவும் வாழ்த்தியுள்ளார்.

மேலும் செய்திகள்: நடிகை டிஸ்கோ சாந்தி சகோதரர் அருண்மொழி வர்மன் மரணம்...! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!
 

அதே போல் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனரும், விநியோகஸ்தருமான  கே.ஆர்,  தனது மகனுடன் என்று தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களையும், நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினையும் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்:கொரோனா தடுப்பு பணியில் கெத்தாக களமிறங்கிய... அஜித்தின் 'தக்‌ஷா' டீம்..! வெளியான சூப்பர் தகவல்...
 

மனிலும் தேசிய விருது பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான JSK சதீஸ்குமார், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!