நடிகை டிஸ்கோ சாந்தி சகோதரர் அருண்மொழி வர்மன் மரணம்...! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!

Published : May 09, 2021, 10:42 AM IST
நடிகை டிஸ்கோ சாந்தி சகோதரர் அருண்மொழி வர்மன் மரணம்...! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!

சுருக்கம்

பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரரும், ஒளிப்பதிவாளரும், நடிகருமான அருண்மொழி வர்மன், புற்று நோய் காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.   

பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரரும், ஒளிப்பதிவாளரும், நடிகருமான அருண்மொழி வர்மன், புற்று நோய் காரணமாக இன்று காலை உயிரிழந்தார். 

தமிழ் திரையுலகில், கவர்ச்சி நடனங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை டிஸ்கோ சாந்தி. இவர் மறைந்த நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகள் ஆவார். தமிழில் 'உதய கீதம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், இதைத்தொடர்ந்து தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ஆகிய 4 மொழிகளிலும் தன்னுடைய கவர்ச்சி நடனத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். மேலும் சில திரைப்படங்களில் குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.

இவர் பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி என்பவரை காதலித்து 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். தன்னுடைய காதல் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்து இவரின் கணவர் மரணம். நடிகர் ஸ்ரீஹரி கடந்த 2013 ஆண்டு மாரடைப்பு காரணமாக இறந்தார். தன்னுடைய கணவர் மறைவில் இருந்தே இன்னும் வெளியே வராத இவருடைய குடும்பத்தில் மற்றொரு மரணம் நிகழ்ந்துள்ளது.

டிஸ்கோ சாந்தி மற்றும் லலிதா குமாரியின் சகோதரரும், நடிகரும், ஒளிப்பதிவாளருமான அருண்மொழிவர்மன், வயிற்று புற்று நோய் காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மூன்று நாட்களாக இவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதால், நேற்று முன்தினம் சென்னை தி.நகரில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். 

இந்நிலையில், இன்று காலை அருண்மொழி வர்மன் காலமானார். இவருக்கு வயது 52 . இவருக்கு ஷர்லி என்ற மனைவியும், அப்ரினா, மகாலட்சுமி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இதையடுத்து இன்று மதியம் 12.30 மணியளவில் மகாபலிபுரத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்படுவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?