கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க... நடிகர் பார்த்திபன் கொடுத்த போதி தர்மர் காலத்து ஐடியா...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 29, 2020, 12:40 PM IST
கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க... நடிகர் பார்த்திபன் கொடுத்த போதி தர்மர் காலத்து ஐடியா...!

சுருக்கம்

ஒத்த செருப்புடன் ஆஸ்கர் வரை சென்று அடி வைத்த பிரபல நடிகர் பார்த்திபன், கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான சில வழிமுறைகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

கொரோனா என்ற ஒற்றை வார்த்தை இன்று உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: மனைவி சங்கீதாவுடன், தளபதி விஜய்... கலக்கல் ஜோடியின் அரிய புகைப்பட தொகுப்பு...!

ஹாங்காங், மெக்சிகோ, தைவானிலும் கொரானா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் பரவலாம் என்ற அச்சம் நிலவுவதால், அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒத்த செருப்புடன் ஆஸ்கர் வரை சென்று அடி வைத்த பிரபல நடிகர் பார்த்திபன், கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான சில வழிமுறைகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவ தொடங்கியுள்ளதால், ஆயுர்வேதம் மற்றும் சித்தாவில் உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் விஷ காய்ச்சலில் இருந்து நம்மை தற்காத்து கொள்வது எப்படி என்று குறிப்பிட்டுள்ளார். நிலவேம்பு கசாயம், கருமிளகு, கிருஷ்ண துளசி உள்ளிட்ட மூலிகைகளை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நடிகர் பார்த்திபனின் இந்த உபயோகமான பதிவிற்கு பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!