மனைவியின் 51-ஆவது பிறந்தநாள்.. சிம்பிளாக கொண்டாடிய வீடியோவை வெளியிட்ட நடிகர் நெப்போலியன்!

Published : Dec 26, 2023, 06:12 PM IST
மனைவியின் 51-ஆவது பிறந்தநாள்.. சிம்பிளாக கொண்டாடிய வீடியோவை வெளியிட்ட நடிகர் நெப்போலியன்!

சுருக்கம்

தமிழ் திரையுலகில், ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகராகவும், அரசியல்வாதியாகவும் அறியப்படும் நெப்போலியன் தன்னுடைய மனைவியின் 51 வது பிறந்தநாள் வீடியோவை வெளியிட அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.  

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நெப்போலியன், 'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். பாரதிராஜா இயக்கத்தில் உருவான இந்த படத்தில், நெப்போலியனுக்கு ஜோடியாக சுகன்யா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, எம்ஜிஆர் நகரில், சின்ன தாயே, ஊர் மரியாதை, தலைவாசல், அபிராமி, கேப்டன் மகள், உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

பெரிய மீசையுடன் இருக்கும் முரட்டு ஹீரோவாக மட்டுமின்றி, வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு தொடையை தட்டி ஹீரோக்களையை புரட்டி எடுக்கும் வில்லனாகவும் நடித்து அசத்தியுள்ளார். இதுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நெப்போலியன், திரை உலகில் ஒரு பாடகராகவும் பிரபலமானவர். குறிப்பாக இவர் பாடிய எட்டுப்பட்டி ராசா பாடல், பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

புடிச்சாலும் புளியங்கொம்பு.. ராதா மகள் கார்த்திகாவின் கணவர் ரோஹித் மேனனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

நடிப்பு, பாடல் என்பதை தாண்டி... திமுக கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட இவர், எம் பி ஆகவும் பதவி வகித்தார். எம்.பி-யாக இருந்த போது மக்களுக்கு பல உதவிகள் செய்துள்ளார். கடந்த 1993-ஆம் ஆண்டு ஜெயசுதா என்பதை திருமணம் செய்து கொண்ட நெப்போலியனுக்கு தனுஷ் - குணால் என இருந்து மகன்கள் உள்ளனர். திடீர் என நெப்போலியனின் மகனுக்கு ஏற்பட்ட உடல்நல பிரச்சனையால்... திரையுலகம், மற்றும் அரசியல் என அனைத்தையும் விட்டு வெளியேறி அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

அங்கு நிறுவனம் ஒன்றை நடத்தி வருவது மட்டும் இன்றி... சுமார் 13,000 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார். சமீபத்தில் நெப்போலியனின் 60-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் அமெரிக்காவில் பிரமாண்டமாக நடந்த நிலையில், அதில் நடிகை மீனா, குஷ்பூ, இர்பான் போன்ற பலர் கலந்து கொண்டதை பார்க்க முடிந்தது. இதை தொடர்ந்து தன்னுடைய மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை நெப்போலியன் சமூக வலைத்தளத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதுகுறித்து அவர் போட்டிருந்த பதிவில்... டிசம்பர் 24, 2023 அன்று எனது மனைவியின் 51வது பிறந்தநாளை எனது மூத்த சகோதரன் மற்றும் எனது மைத்துனியுடன் எங்கள் குடும்ப நண்பர் வழக்கறிஞர் ஆசிரின் வீட்டில் பாம் பீச் புளோரிடாவில் கொண்டாடினோம் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!