சொந்த ஊரில் தனிமைப்படுத்தப்பட்ட ரஜினி பட நடிகர்... திரைத்துறையை ரவுண்டு கட்டும் கொரோனா...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 18, 2020, 08:13 PM IST
சொந்த ஊரில் தனிமைப்படுத்தப்பட்ட ரஜினி பட நடிகர்... திரைத்துறையை ரவுண்டு கட்டும் கொரோனா...!

சுருக்கம்

இதையடுத்து குடும்பத்தினருடன் அடுத்த 14 நாட்களுக்கு நவாஸுதீன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின்  200க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டி படைக்கிறது. இந்தியாவில் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பதற்காக 4ம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில தளர்வுகளுடன் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும், மக்கள் கட்டாயம் முகக்கவசங்களை அணிய வேண்டும், தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

ஹாலிவுட்டை பொறுத்தவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏராளமான பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வெளிநாடு சென்ற வந்த பாலிவுட் பிரபலங்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக் குடும்பத்துடன் மும்பை வீட்டில் தங்கி இருந்தார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் புதனாவுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். 

அவர் செல்வதற்கு முன்பு மகாராஷ்டிரா அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு அனைவருக்கும் கொரோனா தொற்று இருக்கிறதா என்று சோதித்து பின்னர் நோய் தொற்று இல்லை என்பது உறுதியானதால் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கடந்த சனிக்கிழமை அவர்கள் சொந்த ஊர் சென்றடைந்துள்ளனர். இதையடுத்து குடும்பத்தினருடன் அடுத்த 14 நாட்களுக்கு நவாஸுதீன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து, அவரது சகோதரர் கூறியதாவது. இன்னும் 14 நாட்களுக்கு நவாஸுதின் குடும்பத்தாரைத் தவிர்த்து வேறு யாரையும் சந்திக்க மாட்டார்’ என்று தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!