அதில் அனிருத், ஆன்ட்ரியா லிப் -லாக் காட்சிகள் இடம் பெற்று சர்ச்சையை கிளப்பியது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆன்ட்ரியா. “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு” போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. அதன் மூலம் கமலுடன் “விஸ்வரூபம்” படத்தின் முதலாவது மற்றும் 2ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தி நடித்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் உடன் ஆன்ட்ரியா நடித்த வடசென்னை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
இதையும் படிங்க:
இடையில் இசையமைப்பாளர் அனிருத் உடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. அதில் அனிருத், ஆன்ட்ரியா லிப் -லாக் காட்சிகள் இடம் பெற்று சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே திருமணமான நடிகருடன் உறவில் இருந்ததாகவும், அதனால் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஆன்ட்ரியா பல மாதங்கள் சிகிச்சையில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: செல்ஃபி எடுக்க போன இளம் நடிகையிடம்... சிம்பான்ஸி குரங்கு பார்த்த வேலையை நீங்களே பாருங்க....!
அதனால் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த ஆன்ட்ரியா தற்போது விஜய் , விஜய் சேதுபதி ஆகியோர் முதன் முறையாக ஒன்றிணையும் “மாஸ்டர்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே தற்போது ஆன்ட்ரியாவின் முத்தக்காட்சி ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சித்தார்த் உடன் ஆன்ட்ரியா அவள் என்ற படத்தில் நடித்தார். அதில் ஏராளமான லிப்-லாக் மற்றும் நெருக்கமான காட்சிகள் இடம் பெற்றன. அந்த படத்தில் இடம் பெற்ற சீன்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.