கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இணைந்த 'கைதி' பட நடிகர்..!! வைரலாகும் புகைப்படம்..!!

Published : Aug 24, 2021, 07:40 PM IST
கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இணைந்த 'கைதி' பட நடிகர்..!! வைரலாகும் புகைப்படம்..!!

சுருக்கம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமலஹாசன் நடிக்கும் படமான 'விக்ரம்' படத்தில், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோரை தொடர்ந்து தற்போது புதிதாக கைதி பட நடிகர் இணைந்துள்ளார். இவர் கமலஹாசனுடன் எடுத்த கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.  

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமலஹாசன் நடிக்கும் படமான 'விக்ரம்' படத்தில், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோரை தொடர்ந்து தற்போது புதிதாக கைதி பட நடிகர் இணைந்துள்ளார். இவர் கமலஹாசனுடன் எடுத்த கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மாஸ்டர் பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 3 முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங்கின் சென்னையில் மிகவும் எளிமையான முறையில் தொடங்கியது. இதில்  இயக்குனர் லோகேஷ், நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். 'மாஸ்டர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் யாரை வைத்து இயக்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்க உள்ளதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. கமல்ஹாசன் அரசியல் பணிகளில் பிசியாக இருந்ததாலும், கொரோனா பேரிடர் காரணமாகவும் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

அதற்கு முன்னதாக படம் தொடங்க உள்ளதை அறிவிக்கும் விதமாக கடந்த வாரம் ஜூலை 10ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியிட்டனர். அதில், விஜய் சேதுபதி, கமல், ஃபகத் பாசில் ஆகிய மூவரின் முகமும் இடம் பெற்றிருந்தது. உலக நாயகன் உடன் நடிப்பில் பட்டையைக் கிளப்பும் நடிகர்களான ஃபகத் பாசில், விஜய் சேதுபதி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.

அரசியலில் தீவிரம் காட்டி வந்த கமல் நீண்ட இடைவெளைக்குப் பிறகு ஷூட்டிங்கில் பங்கேற்றதால் ஒரு மாணவன் போல் உணர்கிறேன் என உருக்கமாக தெரிவித்திருந்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே. தற்போது படப்பிடிப்பு படுஜோராக நடந்து வரும் நிலையில், அடுத்து இந்த படத்தில் நடிக்க உள்ளது பிரபலங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தில் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு ஜோடியாக மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும் நடிக்கிறார் என கூறப்பட்டது. இதை தொடர்ந்து, தற்போது சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, கோ, முகமூடி, கைதி உள்ளிட்ட பல படங்களின் நடித்து பிரபலமான நடிகர் நரேன் நடிக்கிறார் என்கிற தகவல் அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது. நடிகர் நரேன் கமலஹாசனுடன் எடுத்து கொண்ட புகைப்படமும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு
பிரம்மாண்ட கூட்டணி! ‘டேவிட் ரெட்டி’ படத்தில் ராம் சரண் - சிம்பு கேமியோ? மிரட்டும் அப்டேட்!