படப்பிடிப்பில் விபத்து... நடிகை ஐஸ்வர்யா ராய் கணவர் அபிஷேக் பச்சன் மருத்துவமனையில் அனுமதி!

Published : Aug 24, 2021, 05:22 PM IST
படப்பிடிப்பில் விபத்து... நடிகை ஐஸ்வர்யா ராய் கணவர் அபிஷேக் பச்சன் மருத்துவமனையில் அனுமதி!

சுருக்கம்

படப்பிடிப்பில் ஏற்பட்ட சிறிய விபத்து காரணமாக, நடிகர் அபிஷேக் பச்சன் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

படப்பிடிப்பில் ஏற்பட்ட சிறிய விபத்து காரணமாக, நடிகர் அபிஷேக் பச்சன் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அபிஷேக் பச்சன் தற்போது அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட சிறிய விபத்தில் சிக்கி அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் தற்போது கையில் பெரிய கட்டுடன் காணப்படுகிறார். இவரை பார்க்க இவரது தந்தை மற்றும் சகோதரி மருத்துவமனைக்கு வந்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிற்று கிழமை இவருடைய கையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இப்போது, தான் இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது இவருடைய மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன், இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பிற்காக மத்திய பிரதேசம் சென்றிருந்த நிலையில், நேற்றைய தினம் தான்... மும்பை திரும்பியுள்ளார்.

பின்னர் மகளுடன் மருத்துவமனைக்கு சென்று தன்னுடைய கணவரை சந்தித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். கையில் மட்டுமே காயம் என்பதால், மருத்துவர்கள் சில வாரங்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என  அறிவுறுத்தியுள்ளனர். எனவே தற்போதைக்கு படப்பிடிப்புகளில் அவர் கலந்து கொள்ள கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு' ரீமேக்கில் அபிஷேக் பச்சன் நடித்து வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் காயம்  ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை. 

நடிகர் அபிஷேக் பச்சன் படப்பிடிப்பில் சிறிய விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள்  தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு